சென்னை: அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான். கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார் இயக்குநர் பேரரசு.
எக்ஸ்டிரீம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு தெரிவித்தார் பேரரசு. இயக்குநர் பேரரசு பேசியதாவது:

இயக்குநர் படத்தை மிகக் குறைந்த காலத்தில் எடுத்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை மிக அழகாக பிளான் செய்து, மிக சிக்கனமாக எடுப்பது தான் மிகச்சிறந்த இயக்குநருக்கான திறமை. இவர்கள் அதைத் திறம்படச் செய்து நல்ல படத்தைத் தந்துள்ளார்கள்.
ரக்ஷிதா கண் பயங்கர ஈர்ப்பாக இருப்பதாகச் சொன்னார் ஆர் வி உதயகுமார் சார், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ரக்ஷிதா நன்றாகவும் நடித்துள்ளார். பெண்களுக்கான நல்ல விசயத்தைச் சொல்லும் படமாக இப்படம் வந்துள்ளது. சினிமா தான் நம் நாட்டில் உயர்ந்த விசயம், பெண்ணிற்குப் பாதுகாப்பை, குடியின் தீமையை, அம்மா அப்பா பாசத்தை என பல நல்ல விசயங்களை, சினிமா தான் சொல்கிறது.
அரசியல்வாதி நடிக்க வந்தால் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?. எல்லோரையும் எல்லா காலகட்டத்திலும் கூத்தாடிகள் எனத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கூத்தாடி தான் நாட்டுக்கு நல்லது சொல்கிறான்.
கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான். ஜாதியைப் பேசுவது எப்படி தவறோ?, அது போல் கூத்தாடியை இழிவாகப் பேசுவது தவறு தான். அரசியல்வாதியை விட சினிமாக்காரன் எவ்வளவோ மேல். ஒரு நல்ல விசயத்தைப் பேசும் இப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}