இயக்குநர் சீனு ராமசாமியும் டைவர்ஸ்.. 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுவதாக அறிவிப்பு!

Dec 12, 2024,12:12 PM IST

சென்னை: இயக்குனர் சீனு ராமசாமி,தனது மனைவி ஜி எஸ் தர்ஷனாவுடனான திருமண வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். 

முன்னொரு காலத்தில் வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவருக்குள் எவ்வளவு சண்டைகள் வந்தாலும் ஒருவரையொருவர் விட்டு பிரிய கூடாது. கடைசி வரையிலும் கரம்பிடித்தவருடன் வாழ வேண்டும் என  தம்பதிகள் உறுதியுடன் வாழ்ந்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் எவ்வளவு  மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் கூட விட்டுக் கொடுத்து புரிந்து வாழ்ந்து வந்தனர். வீட்டுக்கு வீடு தாத்தா பாட்டி, அம்மா அப்பா என்று பெரியவர்கள் இருந்ததால் பிரச்சினை ஏற்பட்டால் உடனே நடுக் கூடத்தில் பஞ்சாயத்து வைத்து சமரசமாகி விடுவார்கள்.



ஆனால் இன்று தாத்தா பாட்டிகள் வீட்டோடு இல்லை. அம்மா அப்பாக்களுக்கும் வீடுகளில் இடம் குறைய ஆரம்பித்து விட்டது. எனவே கணவன் மனைவி சண்டை பூதாகரமாகி விவாகரத்து வரை போக ஆரம்பித்து விட்டனர். விட்டுக் கொடுத்தல்  புரிதல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி  வெளிநாட்டு கலாச்சாரத்தை பின்பற்றி விவாகரத்து பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில்  விவாகரத்து என்பது பேஷனாக மாறிவிட்டது. அதிலும் திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வதையே வழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது. 

எதற்கெடுத்தாலும் ஒருவரை ஒருவர் குறை கூறி வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் கணவன் மனைவியிடையே புரிதல் இல்லாமையே. கடந்த சில நாட்களாகவே தமிழ் திரை உலகில்  விவாகரத்து செய்யும்  பிரபலங்களின் எண்ணிக்கைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.  ஜெயம் ரவி - ஆர்த்தி, ஜிவி பிரகாஷ் - சைந்தவி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் - சைரா பானு எனத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அவர்களுக்கு முன்பே தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகள் பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து அளித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

இசையமைப்பாளர் இமானும் கூட விவாகரத்து செய்து மறுமணமும் செய்து கொண்டார். இவர்களைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் சீனு ராமசாமி, மனைவி தர்ஷனா இருவரும் பரஸ்பரமாக பிரிய போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது திரையுலகில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது, 

அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி ஜி எஸ் தர்கஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது, என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு அதன் உரிமைக்கும் மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம் என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி ஒரு அருமையான இயக்குநர். மண் சார்ந்த, உறவு சார்ந்த, உணர்வு சார்ந்த கதைகளைப் படமாக்கி வருபவர். கூடல் நகர் படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன், உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

புரிதல் இல்லாத வாழ்க்கை அதிகரிப்பது ஏன்.. இது திரையுலகில் மட்டுமல்ல, சாமானியர்களிடமும் அதிகரித்து வருகிறது. கண்டிப்பாக சீரியஸாக யோசிக்க வேண்டிய பிரச்சினை இது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!

news

2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்