கின்ஹாசா: காங்கோ நாட்டில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 140க்கும் மேலானோர் உயிரிழந்துள்னர். இது மலேரியாவின் தீவிர வடிவம் என்று தற்போது மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த சில வாரங்களாக மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காய்ச்சல் என்ன என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. பெண்கள், குழந்தைகள்தான் இந்த மர்மக் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்ப்பட்டுள்ளனர்.

காங்கோவில் பரவி வருவது, மலேரியாவின் தீவிர வடிவம் என்று தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் சிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கோ நாட்டு மருத்துவத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்மக் காய்ச்சலின் மர்மம் தெரிய வந்துள்ளது. இது மலேரியாவின் தீவிர வடிவம் ஆகும். சுவாசப் பிரச்சினைதான் இதன் பிரதான அறிகுறியாகும். ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக இது அதீதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதலே இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் 6.2 சதவீதமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது என்ன நோய் என்று தெரியாமல் இருந்தபோது இந்த காய்ச்சலுக்கு Disease X என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியிருந்தது. காரணம் எந்த நோய்க் கிருமியால் இது பரவுகிறது என்பது கண்டறியப்படாமல் இருந்தது. மேலும் இது பெருந்தொற்று நோயாகப் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஹூ முன்பு கூறியிருந்தது.
உலகிலேயே மலேரியா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று காங்கோ. உலக அளவில் மலேரியாவால் பலியாவோரில் 11 சதவீதம் பேர் காங்கோ நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலேரியாவால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் மலேரியா பரவுவதிலும் காங்கோ முக்கியப் பங்கு வகிக்கிறது.
உலக அளவில் 2000மாவது ஆண்டு முதல் இதுவரை 20 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவிலான பாதிப்பு என்றால் அது ஆப்பிரிக்க நாடுகளில்தான் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளே மலேரியா இல்லாத நாடாக மாற்ற உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}