அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம்.. தேமுதிகவிற்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக கடமை.. பிரேமலதா

May 29, 2025,06:50 PM IST

சென்னை: அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கமலஹாசனுக்கு திமுக  சீட் கொடுத்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல் தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது, 


பொறுத்தவர் பூமி ஆழ்வார். அதில் எந்தவித மாற்று கருத்தும் எங்களுக்கு இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நம்பிக்கையோடு இருக்கிறோம். அதற்கான எந்தவித பதட்டமும் அவசரமோ எங்களுக்கு கிடையாது. இதை செய்தியாளர்களுக்கு தான் நான் சொல்கிறேன். பொறுமை கடலினும் பெரிது. இது எங்களுக்கு இல்லை. எங்களை பொறுத்தவரை பொறுத்தார் பூமி ஆள்வார்.


திமுக சொன்னபடி கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் கொடுத்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம்‌. வார்த்தைகள் தான் முக்கியம். அந்த வார்த்தை படி நிச்சயம் நடப்பவர்கள் மீது மக்களுக்கும் சரி, தமிழகத்தில் இருக்கும் எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை வரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால்தான் நான் சொல்கிறேன். மாநிலங்களவை சீட் தேமுதிகவிற்கு தர வேண்டியது அதிமுகவின் கடமை.



2024 பாராளுமன்ற தேர்தலின் போது ஐந்து எம்.பி, ஒரு ராஜ்ய சபா சீட்டும் உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் அது அவர்களின் கடமை என்று நான் கூறுகிறேன். ஏனெனில் ஏற்கனவே இரண்டு முறை தேமுதிகவிற்கு வந்த வாய்ப்பை ஒரு முறை அன்புமணி ராமதாஸும் அவர்களுக்கும், இன்னொரு முறை ஜி.கே வாசன் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மனதார ஏற்றுக்கொண்டோம்.


அதனால் இந்த முறை எங்களுக்கு தர வேண்டியது அவர்களின் கடமை. இது எங்களுடைய முறை. அவருடைய சொல்லில் நிச்சயம் உறுதியாக இருந்து, நம்பிக்கையை அளிக்கக் கூடியவராக, மக்களுக்கும், அவர் கட்சிக்காரர்களுக்கும் சொன்ன வாக்கை நிரூபிக்கணும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.


 இது அவர்கள் குடும்ப விவகாரம். அதை வெளியில் பேசுவதே முதலில் தப்பு. எவ்வளவு பெரியவர் அவர், அவங்க குடும்ப விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தது என்ன பொறுத்த வரைக்கும் தவறு. அன்புமணியை குறைந்த வயதிலேயே அமைச்சராக நியமித்தது தவறு என்று ரொம்ப காலதாமதமாக உணர்ந்து இருக்கிறாரோ என்றுதான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது. இதனால் இது அவர்களின் கட்சி விவகாரம். அவர்களின் குடும்ப பிரச்சினை. இதை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. அதைப் பற்றி கருத்து கூற எனக்கு எதுவும் இல்லை.


தவெகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது  வரவேற்கத்தக்கது. வருங்காலத்தில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்