யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்

Jan 05, 2026,04:47 PM IST

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


இந்தச் சந்திப்பின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "வரும் தேர்தலில் மக்கள் விரும்பிய அணி நிச்சயம் வெற்றி பெறும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாக உள்ள "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையை தேமுதிக-வும் முன் வைத்துள்ளது. "ஆட்சியில் பங்கு என்ற குரல் இப்போது ஓங்கி ஒலிக்கிறது, அதற்கான சாத்தியமும் இருக்கிறது" எனத் தெரிவித்த அவர், வரும் தேர்தலில் தேமுதிக வெறும் கூட்டணியில் மட்டும் இல்லாமல், அதிகாரப் பகிர்விலும் கவனம் செலுத்தும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார்.




தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் ஜனநாயக ரீதியில் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், "மாவட்டச் செயலாளர்கள் விரும்பும் கூட்டணியை ஒரு சீட்டில் எழுதி பெட்டியில் போடும்படி சொல்லியுள்ளோம். அவர்களின் கருத்துக்கள் அந்தந்த மாவட்ட மக்களின் கருத்துக்களாகப் பிரதிபலிக்கும்" என்றார். இந்தப் பெட்டியில் சேகரிக்கப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.


கடலூர் மாநாட்டில் முக்கிய அறிவிப்பு :


கூட்டணி குறித்த தேமுதிக-வின் அதிகாரப்பூர்வ முடிவு வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களைப் பிரித்துப் படித்துப் பார்த்து, அதன் அடிப்படையில் ஒரு நல்ல கூட்டணி அமையும்" என்று பிரேமலதா கூறினார்.


கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் பெரிய சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. "ஆட்சியில் பங்கு" என்ற பிரேமலதாவின் அறிவிப்பு, திராவிடக் கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக-வின் பிடியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்