அம்பி சீமான் அப்பப்ப அந்நியன் ஆய்ருவார்.. வாய் இருக்கிறதே என்பதற்காக.. பிரேமலதா விஜயகாந்த் பொளேர்!

Nov 04, 2024,06:10 PM IST

மதுரை: சீமான் திடீர்னு அம்பியாக இருப்பார். திடீர்னு அந்நியனாக மாறுவார். வாய் இருக்கிறதே என்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை விமர்சித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யை, மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். லாரி அடித்து செத்துப் போய்ருவ என்றெல்லாம் அவர் பேசியது, இதுவரை அவர் மீது மதிப்பு வைத்திருந்த பலரையும் கூட முகம் சுளிக்க வைத்துள்ளது. தம்பி தம்பி என்று பாசத்தைக் கொட்டி பேசியவர், தனக்கு சாதகமாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, இவ்வளவு குரூரமாக பேச வேண்டுமா என்ற ஆதங்கத்தையும் சீமான் பேச்சு கிளப்பியுள்ளது.



மறுபக்கம், சீமான் குறித்தும், நம்மை விமர்சிப்போர் குறித்தும் தரக்குறைவாக யாரும் பேசக் கூடாது எனது கட்சியினருக்கு உத்தரவிட்டு, தான் எவ்வளவு நாகரீகமானவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் விஜய். தனது கட்சியினர் பிற தலைவர்களை விமர்சிக்கும்போது நாகரீகமாகவே விமர்சிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சீமான் பேச்சு குறித்து மதுரைக்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் சிரித்தபடியே, அவர் திடீர்னு அம்பியாக மாறுவார்.. திடீர்னு அந்நியனாக மாறுவார்.. இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஏன் தம்பின்னு சொனன்னார். இப்போ ஏன் லாரி அடிச்சு சாவேன்னு சொன்னார் என்பதை அவர்தான் சொல்லணும். அதுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

எப்போதும் ஒரே நிலைப்பாட்டுடன் இருக்கணும். பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கார் என்பதற்காக நமது வாய்க்கு வந்தையெல்லாம் பேசக் கூடாது.

அரசியலுக்கு வரும்போது, தனது எதிரி யார் என்பதை ஒவ்வொருவரும் அடையாளம் கண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தனது கருத்தை சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காலம் இன்னும் நிறைய இருக்கிறது. இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டு, மாநாடு போட்டு பெயரைச் சொல்லி வந்திருக்கிறார். அவர் கடந்து வர வேண்டிய பாதை ஏராளம் ஏராளம். அவர் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகளை பொறுத்துதான் எல்லாம் தெளிவாகும். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

அதிகம் பார்க்கும் செய்திகள்