பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Nov 04, 2025,05:54 PM IST

சென்னை: பொன்முடி, சாமிநாதன் இருவரையும் திமுக துணை பொதுச்செயலர்களாக நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை திமுக தொடங்கி செயல்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது திமுக துணைப்பொதுசெயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா என 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது பொன்முடி, சாமிநாதனை சேர்த்து எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொன்முடி துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவர்.  தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்தனர். பல்வேறு சர்ச்சைகளால் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 




அதேபோல் மு.பெ.சாமிநாதன் தற்போது செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார். இவர் ஈரோடு மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.


இது குறித்து திமுக தலமைக் கழக பதவி நியமன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் ப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்டசெயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

news

மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு

news

தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

news

உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

news

கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்

news

மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்