டெல்லி: டாக்டர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதில் கடந்த செவ்வாய்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, அம்பேத்கர் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. அவரது பேச்சு அம்பேத்கரை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலுமாக போராட்டம் தொடர்கிறது. நேற்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக வந்தபோது பாஜகவிற்கும் காங்கிரஸ்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு பாஜக எம்பிகள் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்பிக்கள் கொடுத்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது காந்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அமித் ஷாவிற்கு எதிராக திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
நாகை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் அமித் ஷாவின் உருவ பொம்மையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிவகாசியில் அம்பேத்கருக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}