கனிமொழி, தமிழச்சி, சல்மா.. நாடாளுமன்றத்தில் புதிய வரலாற்றை எழுதும் திமுக!

May 28, 2025,03:01 PM IST

சென்னை: இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று பெண் கவிஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய முதல் கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளது. 


இந்திய அளவில் ஒரே நேரத்தில், ஒரு கட்சியைச் சேர்ந்  இத்தனை பெண் கவிஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் இத்தேர்தல் மூலம் எம்.பிக்களாக முடியும். இதில் திமுக தனது வேட்பாளர்களை இன்று அறிவித்தது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒரு சீட் தரப்பட்டுள்ளது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 


இதில் சல்மாவின் நியமனத்தின் மூலம் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது திமுக. அதாவது ஒரே நேரத்தில் அதிக அளவிலான பெண் கவிஞர்களை எம்.பிக்களாக்கியுள்ள கட்சி என்ற பெருமை படைத்துள்ளது திமுக. இது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றிலேயே முதல் முறை. ஏற்கனவே கவிஞர் கனிமொழி தூத்துக்குடி எம்பியாக  உள்ளார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருந்தார். தி இந்துவின் துணை ஆசிரியர், குங்குமம் தமிழ் வார இதழ்களின்  பொறுப்பாளராக பணியாற்றியவர்.  சிங்கப்பூரை தளமாகக் கொண்ட தமிழ் முரசு என்ற தமிழ் செய்தித்தாளின் சிறப்பு ஆசிரியராக இருந்தவர் கனிமொழி ஆவார் .


இரண்டாவதாக தமிழச்சி தங்கப்பாண்டியன். அவரும் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தென் சென்னை எம்பியாக உள்ளார். இவர்  குங்குமம் இதழில் கையறு பாடல் என்ற கவிதையை எழுதியுள்ளார். இதுவே இவரது முதல் படைப்பாகும். தொடர்ந்து பல கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், எழுதி உள்ளார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பன்னாட்டு தேசிய கருத்தரங்கில் இவை குறித்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனர்.

அதேபோல் பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்று, அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத்தில் பங்கேற்கும் ஆர்வமும் இவருக்கு உண்டு. பிசாசு என்ற திரைப்படத்தில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார்.


இந்த வரிசையில் மூன்றாவது கவிஞராக இடம் பெறுகிறார் சல்மா.  திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் சல்மா. இவர் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக, பன்முக திறமைகளைக் கொண்டவர். இவர் 90களில் இருந்து பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது தி.மு.க. மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்ந்து மூன்றாவது பெண் கவிஞராக  ராஜ்ய சபாவின் உறுப்பினராகிறார் சல்மா.


மறுபக்கம் திமுக கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் எழுத்தாளர் ரவிக்குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எழுத்தாளர் சு. வெங்கடேசனும் எம்.பிக்களாக உள்ளனர். அந்த வகையில் படைப்புலகுக்கு இது பொற்காலம்தான் போல!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

news

நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்

news

நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி

news

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

news

யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

news

விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்