சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக வார் ரூமை அமைத்துள்ளது திமுக. மொத்தம் 51 பேர் இந்த வார் ரூமில் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் திமுக வார் ரூம்களை அமைத்துள்ளது. தொகுதிப் பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு பூத் கமிட்டி மேலாண்மை, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை கட்சியின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கவனிப்பார்.
ஊடக விவாதக் குழு மேலாண்மை, நட்சத்திரப் பேச்சாளர்கள் மேலாண்மை ஆகியவற்றை துணை அமைப்புச்செயலாளர் எஸ். ஆஸ்டின் பார்த்துக் கொள்வார். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் குழு தேர்தல் பணி வழக்கறிஞர்கள் குழுவையும் திமுக அறிவித்துள்ளது.
தேர்தல் வழக்குகளுக்கான நீதிமன்ற குழு - வழக்கறிஞர்கள் ஆர். சண்முகசுந்தரம், ஆர் விடுதலை, பி வில்சன்.
தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளுக்கான குழுவில் வழக்கறிஞர்கள் ஆ சரவணன், ஜே பச்சையப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காவல் துறை புகார்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவில் வழக்கறிஞர்கள் அஸ்வின் பிரசன்னா, அர்ஜுன் இடம் பெற்றுள்ளனர்.
மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குழுவில் வழக்கறிஞர்கள் இ பரந்தாமன், கே எஸ் ரவிச்சந்திரன், கரூர் மணிராஜ், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே சந்துரு, சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 33 வழக்கறிஞர்களும் வார் ரூமில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக வார் ரூம் அலுவலகத்திற்கான தொடர்பு எண்ணாக 08069446900 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}