வேலூர்: திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வாளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. அதேபோல் துரைமுருகன் மகனும், திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அந்த சமயத்தில், துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கதிர் ஆனந்த் ஆதரவாளரான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் 11 கோடி ரூபாய் பணம் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய 11 கோடி ரூபாய் பணத்தை பதுங்கி வைத்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டுக்கு இன்று காலை 8 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சென்னையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. எம் பி கதிர் ஆனந்த் வீடு மற்றும் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் இன்று காலை முதல் 50க்கும் மேற்பட்ட அமலாக்க துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாகவே சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனைத் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
சோதனை குறித்து சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களோடு துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அங்கு வீட்டில் யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்த அளவுக்குத்தான் எனக்கும் தகவல் தெரியம். எதற்காக சோதனை என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவுடன் பேசுகிறேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}