சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.,வை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என அதிமுக, பாஜக, தவெக என பல கட்சிகள் திட்டமிட்டு, அதற்கான வேலைகளையும் ஏற்கனவே துவக்கி விட்டன. தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் நிலவரத்தை பார்க்கும் போது, ஏன் ஆளுங்கட்சியான திமுக இதுவரை தேர்தல் தொடர்பான எந்த வேலையையும் துவக்காமல் வழக்கமான வேலைகளையே கவனித்து வருகிறது என தோன்றலாம். ஆனால் உண்மை நிலவரம் அது கிடையாது.
திமுக.,வும் ஏற்கனவே தங்கள் பங்கிற்கு தேர்தல் வேலைகளை துவக்கி விட்டது. இருந்தாலும் அரசியல் ஆலோசகர்களின் கருத்து படி, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள திமுக மிக முக்கியமான 4 விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என சொல்லப்படுகிறது.
கடைசி நேர ஆட்சி நிர்வாகம்
அவற்றில் திமுக முதலில் செய்ய வேண்டியது, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் தான் உள்ளது. இந்த 6 மாதங்களில் திமுக அரசின் ஆட்சி எப்படி இருக்க போகிறது என்பது தான் தேர்தலில் திமுக.,வின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும். திமுக அரசு மீதான அதிருப்தி ஓட்டுக்களை தான் எதிர்க்கட்சிகள் குறி வைக்கின்றன. அதனால், இந்த மக்கள் எதிர்ப்பை ஆதரவாக மாற்ற வேண்டிய கட்டாய நிலையில் திமுக உள்ளது.
இதற்கு, தற்போது போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் ஆகியோரை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண வேண்டும். இதனால் சாமாணிய மக்களிடம் திமுக மீது இருக்கும் அதிருப்தி நிலை மாற வாய்ப்புள்ளது.
கூட்டணியின் பாதுகாப்பு
இரண்டாவது கூட்டணியை பாதுகாப்பது. இதற்கான வேலைகளை திமுக ஏற்கனவே துவங்கி விட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தானாக வெளியேறும் நிலையை உருவாக்கி விட்டால் திமுக.,வை பலவீனப்படுத்தி விடலாம் என்பது எதிர்க்கட்சிகளின் கணக்கு. கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் மீண்டும் மீண்டும் அறிவித்து வருவதால், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசும், விசிக.,வும் தவெக பக்கம் செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் சில தகவல்கள் உலா வந்தன.
ஆனால் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகள், தாங்கள் திமுக பக்கம் தான் இருப்போம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலினும் பீகாரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நடத்திய மத்திய அரசுக்கு எதிரான யாத்திரையில் கலந்து கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணியை பலப்படுத்தி விட்டு வந்து விட்டார்.
தொகுதிப் பங்கீடு
மூன்றாவது, கூட்டணி கட்சிகளை தற்போது தக்க வைத்துக் கொள்வதை விட தேர்தல் நெருங்கும் சமயத்திலும் திமுக தக்க வைக்க வேண்டும். இதற்கு தொகுதி பங்கீட்டு விவகாரத்தை மிக கவனமாக கையாள வேண்டும். காரணம் தற்போது கடந்த முறை ஒதுக்கிய சீட்களின் எண்ணிக்கையை இந்த முறையும் கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்வது சந்தேகம் தான். அதோடு இந்த முறை பாமக, தேமுதிக உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுக்க திமுக தலைமை முயற்சி செய்து வருவதால், கண்டிப்பாக தொகுதி பங்கீட்டின் போது நெருக்கடி, குழப்பம் ஆகியவை வரலாம்.
அப்படி நடந்தால் அது அதிமுக கூட்டணிக்கு பலமாகி விடும். கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி, சரியான முறையில் தொகுதி பங்கீட்டை முடித்தால் மட்டுமே பலமான கூட்டணியாக திமுக திகழ முடியும்.
கட்சியில் மாற்றம்
கடைசியாக மக்களின் ஓட்டுக்களை அள்ளுவதற்கு கட்சியில் சில மாற்றங்களை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டிய நிலையில் திமுக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரசாரத்தின் போது வாரிசு அரசியல் என்ற விவகாரத்தை தான் மிக முக்கியமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க உள்ளன. இதை நீர்த்து போக செய்வதற்கு கட்சியில் பலமான ஒருவராக இருக்கும் கனிமொழியை முன்னிலைப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்வது திமுக.,விற்கு மிகப் பெரிய பலம் சேர்க்கும்.
தற்போது வரை டில்லி அரசியலில் திமுக.,வின் முகமாக அறியப்படுபவர் கனிமொழி. மாநில அரசியலை பொறுத்தவரை கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில் கனிமொழிக்கு அறிவாலயத்தில் தனி அறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது தான். அதோடு தமிழக சட்டசபை தேர்தலில் அவருக்கு தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம். இதையே கட்சிக்குள் இருக்கும் சிலரும் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக அரசியலை பொறுத்தவரை, ஜெயலலிதாவிற்கு பிறகு ஒரு பெண் அரசியல் தலைவர், ஆளுமை என யாரும் உருவாகவில்லை. அந்த வெற்றிடம் இருந்து கொண்டே உள்ளது.
பல ஆண்டு கால அரசியல் அனுபவம் மிக்கவர், தேசிய அரசியலும் தெரிந்தவர், கருணாநிதியிடம் நேரடியாக அரசியல் பயின்றவர் என்ற முறையில் கனிமொழிக்கு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, தமிழக அரசியலில் தடம் பதிக்க செய்யலாம். கனிமொழியை முன்னிலைப்படுத்துவதால் பாஜக., அதிமுக போன்ற கட்சிகள் பெண் தலைவர் என்ற முறையில் மிக கடுமையான விமர்சனங்களை திமுக கூட்டணிக்கு எதிராக முன்வைக்க சற்று தயக்கம் காட்டுவார்கள். இது கனிமொழிக்கும் தனிப்பட்ட முறையில் திமுக.,வில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
ஒரே படம்தான்..ஹீரோவானார் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்..சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
{{comments.comment}}