உங்களுக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு?.. திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

Jan 08, 2023,11:10 AM IST
சென்னை: பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சிக்க தகுதியே இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆளுநர் ரவி சமீபத்தில் பேசுகையில், இந்தியா  ஒரு கருத்தை வைத்தால், தமிழ்நாடு அதை எதிர்க்கிறது, தனியாக நிற்கிறது. தமிழ்நாடு என்ற வார்த்தையே தவறு. தமிழகம் என்பதுதான் பொருத்தமானது என்று கூறியிருந்தார். 




ஆளுநரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக கண்டித்து பேசி வருகின்றனர். ஜெயக்குமார் அதிமுகவின் சில தலைவர்களும் கூட  தமிழ்நாடு என்பதே சரியானது. நாங்கள் அண்ணாவின் வழியில் வந்தவர்கள், தமிழ்நாடு என்பதைத்தான் ஏற்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு என்ற வார்த்தை டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. தேசிய அளவில் அது டிரெண்ட் ஆகி வந்தது. இந்த நிலையில் திமுகவினரின் இந்த பிரசாரத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டுகள்:

திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுக  கட்சியினருக்கு ஆளுநர் ஆர். என்.ரவியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? 

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? 
சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது மாண்புமிகு தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை.  1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது. 

இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர்.  வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது என்று  அண்ணாமலை சாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்