2019ல் இந்தியாவின் 3வது பெரிய கட்சி.. 2024ல் 5வது இடம்.. புதிய லோக்சபாவில் திமுகவின் ஸ்டேட்டஸ்!

Jun 04, 2024,06:46 PM IST

சென்னை: 2019 லோக்சபா தேர்தலின்போது இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சியாக உருவெடுத்திருந்த திமுக இந்த முறை 5வது இடத்திற்கு இறங்கியுள்ளது.


கடந்த முறை சோபிக்கத் தவறிய சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ் ஆகியவை இந்த முறை திமுகவை விட அதிக அளவில் சீட் வாங்கியதால் திமுக 3வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டது. அதேசமயம், 3 கட்சிகளுமே ஒரே கூட்டணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.


2019 தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் இக்கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதில் திமுகவுக்கு 24 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதில் சில வேற்று கட்சி வேட்பாளர்கள் உதயசூரின் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டதால் இவர்களும் திமுக உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். 




கடந்த நாடாளுமன்றத்தில் 303 உறுப்பினர்களுடன் பாஜக பெரும்பான்மை பலத்துடன் முதலிடத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 52 எம்.பிக்களைக் கொண்டிருந்தது. 3வது இடத்தில் திமுக இருந்தது. அதற்கு அடுத்த இடங்களில் திரினமூல் காங்கிரஸ் (22), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (22), , சிவசேனா (18), ஐக்கிய ஜனதாதளம் (16), பிஜூ ஜனதாதளம் (12),  பகுஜன் சமாஜ் கட்சி (10) ஆகிய கட்சிகள் இருந்தன.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடிக் கட்சிக்கு 2019 தேர்தலில் வெறும் 5 எம்.பிக்களே கிடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 லோக்சபா தேர்தலில் இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


பாஜக 241 தொகுதிகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 98, சமாஜ்வாடிக் கட்சி இந்த முறை 37 தொகுதிகளை அள்ளியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் திரினமூல் காங்கிரஸ் 29 இடங்களுடன் இருக்கிறது. இதைத் தொடர்ந்து திமுக 22 தொகுதிகளுடன் 5வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளிலேயே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்