நீட்,ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒழிப்போம்-சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை -திமுக தேர்தல் அறிக்கை

Mar 20, 2024,06:32 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தேர்தல் குழு தலைவர் கனிமொழி வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு முக்கிய அம்சங்களை வாசித்தார்.


லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக  மக்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ள உள்ளது என்பது குறித்த தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.


திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை  தயாரிக்கப்பட்டது. கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு  தேர்தல் குழுவினர் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டனர். விவசாயிகள், வணிகர்கள், தொழில் துறையினர் என ஒவ்வொருவரையும் நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்த பின்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 


இது தவிர இணையதளம் வாயிலாகவும் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி வழங்க, இதனை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். 


திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:




- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.


- தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.


- புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.


- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.


- உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.


- சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்


- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.


- பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.


- பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.


- ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.


- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.


- குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 (சிஏஏ) ரத்து செய்யப்படும்.




- தேசிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.


- ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.


- வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை –ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.


- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.


- ஆளுநர் பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.


- மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.


- மத்திய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.


- அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.


-  தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.


- நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.


- நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.


- இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.


- மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.


- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்


- வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.


- வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.




- இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


-  தமிழ்நாட்டில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்ஸி, ஐஐஏஆர்ஐ ஆகியவை அமைக்கப்படும்.


- மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.


- ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.


- இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்