சென்னை: தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் எழுப்பிய விமர்சனக் குட்டிக்கதைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
விஜய்யின் குட்டிக்கதை விமர்சனம்:
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, தமிழக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பதிலளித்துப் பேசினார். அப்போது திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவர் ஒரு குட்டிக்கதையைக் கூறினார். அதில், "ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு யாரையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒரு சிறுவன் அவரிடம் சென்று, ‘என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், ‘தம்பி, உன்னுடைய அப்பா இங்கேதான் இருப்பார் என்று சொன்னார்கள், அதனால் தேடுகிறேன். ஆனால், எங்க உங்க அப்பாவையே காணோம்?’ என்று பதிலளித்தார்" எனக் கூறி முதல்வர் விஜய் அரசியல் ரீதியாக விமர்சித்தார்.
மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி:

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், "‘எங்க உங்க அப்பாவைக் காணோம்’ என்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்றைக்கும் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறேன். அப்பாவை நீங்கள் தேடும் இடத்தில் தேடாதீர்கள்; அவர் மக்கள் மனதில் இருக்கிறார். நீங்கள் தேடும் இடத்தில் இந்த ஸ்டாலின் இருக்க மாட்டான், ஆனால் மக்கள் எங்கு தேடுகிறார்களோ, அங்கு முதல் ஆளாக நிற்பான்" என்று முழங்கினார்.
ஆட்சிச் சாதனைகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்:
தொடர்ந்து பேசிய அவர், கோட்டையிலுள்ள கோப்புகளைச் சுட்டிக்காட்டி விஜய்க்குப் பதிலடி கொடுத்தார். "தலைமைச் செயலகத்தில் (கோட்டையில்) உள்ள கோப்புகளை எடுத்துப் பாருங்கள்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளில் ‘மு.க.ஸ்டாலின்’ என்ற கையெழுத்து இருக்கும். நான் கோட்டையில் தான் இருக்கிறேன், ஆட்சியில் தான் இருக்கிறேன். இந்த மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதலமைச்சர்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு:
தனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், தற்போதைய தவெக ஆட்சியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்குத் தண்ணீர் திறந்து விடாத நிலை ஆகியவற்றைக் கடுமையாகச் சாடினார். மேலும், கூட்டணி குறித்துப் பேசுகையில், "கூட்டணியில் இருந்து மற்ற கட்சிகள் அவர்களாகவே வெளியேறுகிறார்கள். திமுக நிர்வாகிகளோ கூட்டணியே வேண்டாம் என்கிறார்கள். அதனை நாங்கள் விரைவில் தீவிரமாகப் பரிசீலிப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி
"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
ஜூன் மாதம் 27.. சகல நன்மை தரும் சிவபெருமானக்குரிய சனிப்பிரதோஷம்
இதுவும் சரிதானே!
மின்வாரிய நிதிநிலை...வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்
உடைமை தன்மை பற்றி (All about Possessiveness) அலசிப் பிழிவோமா?
இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? சூசகமாக சொன்ன கே.என்.நேரு
{{comments.comment}}