பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி

Oct 31, 2025,05:16 PM IST

சென்னை: பொய் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளை பெற்று விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் ஒரு பிரதமர் பிரச்சாரம் செய்துள்ளார் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைதி பூங்காவாக இன்று வடமாநிலத்தவர்கள் பலரும் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பீகார் மக்களுக்கு ஒழுங்காக வேலை கொடுக்காமல், காப்பாற்றத் தவறியதற்கு எங்கள் மீது பழிபோடுவதா? தமிழ்நாட்டு முதலமைச்சர் மீது பிரதமருக்கு தனிப்பட்ட கோபம். நம்மால் செய்ய முடியாததை ஒரு மாநில முதலமைச்சர் செய்து இந்தியா முழுவதும் பேமஸ் ஆகி விடுகிறாரே என பொறாமை.


பொய் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளை பெற்று விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் ஒரு பிரதமர் பிரச்சாரம் செய்துள்ளார். ஒருமை பாட்டை பாதுகாக்க வேண்டியவர். பிளவுகளை சரிசெய்ய வேண்டியவர் பிரதமர். சாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மாநிலம் வாரியாகவோ பிரச்சினைகளை பேசுகின்ற குறுகிய மனப்பான்மை தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சிக்குயிலும் உள்ள கவுன்சிலர்களுக்கு கூட வராத எண்ணம் இன்று பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது.  இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் ஆங்காங்கே இப்படி பல பொய்களை சொல்வது மோடிக்கு கை வந்த கலை.




அமித்ஷா சொன்னார் இங்கே வி.கே. பாண்டியன் என்ற தமிழர் தான் ஆட்சி புரிகிறார். ஒடிசாவில் இருக்கும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா மானம் இல்லையா. ஒரு தமிழ்நாட்டு காரன் ஆள வேண்டுமா என்று கேட்டவர் அமித்ஷாதான் என்பதை இந்த நாடு மறந்துவிடாது. மோடியும், அமித்ஷாவும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இதே  போல தான் ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, தமிழர்களை எல்லாம் திருடர்களை போல சித்தரித்து பேசியிருந்தார்.


மோடிக்கு நான் சவால் விட்டு கேட்கிறேன் தமிழ்நாட்டில் எங்காவது பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்குரிய ஆதாரம் இருந்தால் அவர் வழக்கு போடட்டும்அல்லது எந்தவித நடவடிக்கையும் எடுக்கட்டும். இதேபோல் தான் 2023 ம் ஆண்டு ஒரு புரளியை பரப்பினார்கள்.பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது உண்மையா என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவர் மாநிலத்தை சார்ந்தவர்கள் கொண்ட குழுவை அனுப்பி தமிழகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து அவர்கள் தந்த அறிக்கையை மோடி படித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பீகாரிகள் நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழ்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

news

234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

news

Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

news

புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

news

திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!

news

முதல் தோட்டா.....!

அதிகம் பார்க்கும் செய்திகள்