"100 கோடி தர்றோம்.. தொடு பார்ப்போம்".. போஸ்டரடித்து... சாமியாருக்கு திமுக சவால்!

Sep 06, 2023,01:47 PM IST
கோவை : உதயநிதியின் தலையை சீவுபவர்களுக்கு ரூ.10 கோடி தருகிறேன் என அறிவித்த சாமியாருக்கு சவால் விட்டு திமுக.,வினர் ஒட்டிய போஸ்டர் கோவையில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 

தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அவர் கருத்து தெரிவித்தார். இதற்கு பலரும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சனாதன தர்மம் பற்றி விவாதம் தான் கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. 




இதற்கிடையில் உதயநிதியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த உ.பி.,யை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதியின் தலையை சீவுபவர்களுக்கு ரூ.10 கோடி தருகிறேன் என அறிவித்ததுடன், உதயநிதியின் போட்டோவையும் வாளால் சீவி, தீவைத்து எரித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, மேலும் பரபரப்பானது. இந்நிலையில் இதற்கு கிண்டலாக பதிலளித்த உதயநிதி, என்னுடைய தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி? ரூ.10 சீப்பு போதுமே. அதை வாங்கிக் கொடுத்தால் நானே தலையை சீவிக் கொள்கிறேன் என்றார்.

சனாதன தர்மம் பற்றிய பேச்சு தீரவமடைந்த வரும் நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்குறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கும், மன்னிப்பு கேட்க முடியாது என உதயநிதி மறுத்துள்ளார். அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் சனாதன தர்மம் விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், கோவையில் பல இடங்களில் திமுக.,வினர் ஒட்டி உள்ள போஸ்டரை புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.



திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "போலி சாமியாரே! 100 கோடி தர்றோம். தொடுடா பார்க்கலாம்" என சாமியாருக்கு பதில் சவால் விடுத்துள்ளனர். திமுக.,வினர் மட்டுமல்ல இவர்களுக்கு போட்டியாக, நாங்களும் போஸ்டர் ஒட்டுவோம் என பாஜக.,வும் போஸ்டர் ஒட்டி உள்ளது. அதில், சனாதனம் எங்கள் மூச்சு என எழுதப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்