"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Jan 10, 2026,04:13 PM IST

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 10, 2026) தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பொங்கல் விழாக்களில் கலந்துகொண்டார். அப்போது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் பொங்கலிட்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கிருந்த பசுக்களுக்கு உணவு வழங்கிய முதல்வர், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தல் குறித்துத் தனது நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டார். 




அவர் பேசுகையில்:"வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்; ஆனால், இப்போது நாம் ஆற்றியுள்ள மக்கள் பணிகளை எல்லாம் பார்க்கும் போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற அபார நம்பிக்கை எனக்கு வந்துள்ளது" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் திமுகவைப் போல வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக வேலை செய்ய முடியாது என பாஜகவினரே மற்றும் பிற எதிர்தரப்பினரே சொல்கிறார்கள்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். 'வெல்வோம் ஒன்றாக' என்ற முழக்கத்தோடு, தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் யாரையும் பின் தங்க விடமாட்டோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.


இந்த விழாக்களில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி முதல்வரின் இந்த "200+" தொகுதி வெற்றி முழக்கம் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்