வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மேலும் ஒரு வரி விதிப்பை அறிவித்துள்ளார். அதாவது அமெரிக்காவில் தயாரிக்கப்படாத, வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க திரைப்படத் தொழில் நலிவடைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு அமெரிக்காவில் திரைப்படத் தயாரிப்பை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க திரைப்படத் துறையை காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் விளக்கியுள்ளார். அமெரிக்க திரைப்படத் துறை வேகமாக அழிந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் பல சலுகைகளை தந்து அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த புதிய வரியை அறிவித்துள்ளார். இந்த வரியின் மூலம் அமெரிக்க திரைப்படத் துறையை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்க வணிகத்துறைக்கும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கும் அதிகாரம் அளிக்கிறேன். அமெரிக்காவில் திரைப்படங்கள் மீண்டும் தயாரிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். "WE WANT MOVIES MADE IN AMERICA, AGAIN" என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார் டிரம்ப்.
அமெரி்க வணிகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவில், We're on it என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரி அமெரிக்க அல்லது வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை குறிவைக்குமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு சீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்க திரைப்படங்களை குறைவான எண்ணிக்கையில் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக சீனா கூறியது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த புதிய வரி விதிப்பு அமெரிக்க திரைப்படத் துறையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டிரம்ப் இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்க திரைப்படத் துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்.
இந்தியத் திரைப்படங்கள் அதிக அளவில் அமெரிக்காவில் வெளியாகின்றன. குறிப்பாக தமிழ், தெலுங்குப் படங்களுக்கு அங்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இந்தியப் படங்களை எந்த வகையில் பாதிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
நேர்மையின் அடையாளம் சகாயம்.. அவரது பாதுகாப்பை உறுதி செய்க.. முதல்வருக்கு சீமான் கோரிக்கை!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்.. திரையுலகினர் அஞ்சலி
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!
டாப்ஸ்லிப் மலைப்பகுதியில்.. மலையேற்றத்தின் போது கேரளாவை சேர்ந்த மருத்துவர் உயிரிழப்பு..!
வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி.. டிரம்ப் அதிரடி.. இந்தியப் படங்களுக்கு பாதிப்பு வருமா?
{{comments.comment}}