மூளையை உண்ணும் அமீபா.. பதற்றம் தேவையில்லை.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Jul 08, 2024,05:20 PM IST

சென்னை: கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை உண்ணும் அமீபா குறித்து பயப்பத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கேரளாவில், மூளையை  உண்ணும் அமீபாவால், ஏரி மற்றும் குளங்களில் குளித்த 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுள், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த மூவரும் ஆறு, குளங்களில் குளிக்கும் போது அவர்களது மூக்கின் வழியாக சென்ற அமீபாவால் தான் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 




இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை திசுக்களை அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இறந்து போவதாக அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த அமீபா பாதிப்பால் கேரளாவில் 4வதாக ஒரு சிறுவன்  பாதிக்கப்பட்டுள்ளான்.


இந்த அமீபா குறித்து தமிழ்நாட்டிலும் பலர் கவலை அடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், மூளை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் கவனக்குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த பர்டிக்குலர் டிசிஸ் வருதுனு சொல்றோம். அதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். 


குடிநீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் சேகரிக்கும் சம்ப்பில், மழை தண்ணீர் புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நாமளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். கைகளை ரெலகுலராக கழுவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்