தருமபுரி : தந்தை பெரியாரை தவறாகப் பேசினால் பாமக வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என பாஜகவை கண்டித்து பேசியுள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செய்து வருகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் மதுரையில் அவர் பேசுகையில், கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன்பு இருந்து அகற்றப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை இது தான் என்று பேசினார்.
இது சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் இதைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:

தமிழக முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து விட்டார்கள். பீகாரில் அறிவித்து கணக்கெடுப்பு முடித்து, அதனுடைய முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள். நேற்று முன்தினம் அது சம்பந்தமாக பீகார் மாநிலத்தில் 65 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் உயர்த்துவோம் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் 75 விழுக்காடு இட ஒதுக்கீடு பீகார் மாநிலத்தில் வரப்போகிறது.
தமிழகத்தில் சமூக நீதி , சமூக நீதி என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக இருக்கின்ற மதுக்கடைகள் 5000. ஆனால் சந்து கடையாக 25,000 கடை இருக்கிறது. ஒரு பக்கம் மது, ஒரு பக்கம் போதை பொருள் என ஒரு தலைமுறையே போய்விட்டது. அரசு இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தந்தை பெரியாரின் மண் இது. அந்த மண்ணில் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது தவறு. தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில் சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் பட்டாளி கட்சியின் முன்னோடிகள். எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தப்பாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம் என்றார் அவர்.
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}