டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. பனையூரில் ஆதரவாளர்களுடன்.. 3வது நாளாக தீவிர ஆலோசனை

Jan 03, 2025,06:54 PM IST

சென்னை: சென்னை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் 3வது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் என்ன திட்டத்தில் உள்ளார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் பாமக சார்பில் புத்தாண்டையொட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் கடந்த 28ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேரன் முகுந்தனை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பதாக அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அருகே அமர்ந்திருந்த மாமா அன்புணி ராமதாஸ் குறுக்கிட்டு மைக்கை கையில் எடுத்து, கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவியா? அவருக்கு எல்லாம் என்ன அனுபவம் இருக்கிறது என மேடையிலேயே பகிரங்கமாக தனது தந்தையை எதிர்த்துப் பேசினார். இந்த பேச்சால்  அங்கு ஒரே பரபரப்பு ஏற்பட்டது.




இதனையடுத்து, உடனடியாக டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகி, இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்ட போங்க என்று கூறினார். உடனே ஆத்திரம் அடைந்த அன்புமணி மேடையிலேயே நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி  விட்டு மண்டபத்தை விட்டு வெளியாகினார். 


இந்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி கடந்த 29ம் தேதி நேரில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் எங்கள் கட்சியிலும் நடந்தது என்றார்.


இந்நிலையில், பனையூரில் அன்புமணி ராமதாஸ் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்பட 9 மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனால் பாமகவில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 3வது நாளாக பனையூர் அலுவலகத்தில், 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் அன்புமணி ராமதாஸ்.


தொடர்ந்து பனையூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாவட்டச் செயலாளர்களடன் ஆலோசனை நடத்தி வருவதால் அவரது திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் யாரெல்லாம் தனக்கு ஆதரவாக உள்ளனர் என்று ஆராய்ந்து வருகிறார் டாக்டர் அன்புமணி என்று சொல்லப்படுகிறது.  முகுந்தன் விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து திடமாக இருப்பதால், அதை எப்படி உடைப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் அன்புமணி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


முகுந்தன் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. டாக்டர் அன்புமணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.. டாக்டர் ராமதாஸ் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!

news

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!

news

கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !

news

புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

news

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்

news

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!

news

ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!

news

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்