சென்னை: 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சியில், பாமகவும் இடம் பெறும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதை அவர் சொல்லவில்லை.
சென்னை கொரட்டுரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில், தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்மிட்டன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக 7 ஆண்டுகள் இருக்கிறேன். தமிழகத்தில் பேட்மிட்டன் விளையாட்டுக்கான கட்டுமானம் தேவைப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பேட்மிட்டன் கோர்ட்டுகள் சிறப்பாக இருக்கிறது. தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இண்டோர் ஸ்டேடியம் சிறப்பாக இல்லை. இது தொடர்பான நடவடிக்கைகளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுக்க வேண்டும்.

நான் வருவதற்கு முன்பு சிபாரிசு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது வீரர்களின் திறமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இன்று சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தமிழக வீரர்கள் உள்ளனர்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளன. 57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி தான் ஆட்சி செய்து வருகின்றனர். சென்னையின் நிலைமை மாறவில்லை. திமுக 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில், 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.
அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி, தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பது தான். சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்பது தவறு.
தமிழ்நாட்டில் 2026 கூட்டணி ஆட்சி அமையும் .அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என்றார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}