சென்னை: திமுக ஆட்சியில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், தஞ்சாவூரில் உள்ள திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புதுதில்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் அவர்களின் வீட்டிலிருந்து 300 பவுன் தங்க நகைகள், கிலோ கணக்கில் வெள்ளிப் பாத்திரங்கள், பல லட்ச ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொலையாளிகள் மற்றும் கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்பதற்கு மிக மோசமான சான்று தான் இந்த கொள்ளை நிகழ்வு ஆகும்.
ஏ.கே.எஸ். விஜயன் திமுக விவசாயிகள் அணியின் செயலாளராகவும் உள்ளார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது புது தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். இவ்வளவு அதிகாரம் கொண்ட ஏ.கே.எஸ். விஜயனின் இல்லம் எப்போதும் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், அதையும் கடந்து அவரது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது

திமுக ஆட்சியில் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் கோவையில் அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழும் அரசு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த வட மாநில கொள்ளையர்கள் 2 மணி நேரத்தில் 13 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். அதைத் தடுக்க முடியாத காவல்துறை, பிரச்சினையை திசை திருப்புவதற்காக கொள்ளையர்களை பிடித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
3 வாரங்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்து அந்தக் கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளது. இந்த நிகழ்வையும் தடுக்கத் தவறிய காவல்துறை குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிரச்சினையை திசை திருப்பியுள்ளது.
ஒரு மாநில அரசின் அடிப்படைக் கடமை அந்த மாநிலத்தின் மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்ய திமுக அரசு தவறி விட்டது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது தான் திமுக அரசின் சாதனை ஆகும். மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}