- முனைவர் கோ. லதா
உலகமெங்கும் மக்கள் பெருகிடும் நாளிது
உணர்வுடன் நாம் சிந்திக்கும் தருணமிது
ஜூலை பதினொன்று உலகம் கொண்டாடும்
மக்கள் தொகை தினம் விழிப்பை ஏற்றும்
எண்ணூறு கோடி தாண்டிய மனித இனம்
எண்ணிப் பார்க்க வைக்கும் எதிர்கால கனம்
நிலம் ஒன்றே நமக்கென நிறைந்திருக்க
நெருக்கம் கூடுதே மனிதர் தொகை பெருக
உணவுக்கு வழி தேடும் உலக மக்கள்
உடைக்கும் உறைவிடத்திற்கும் உழைக்கும் மக்கள்
கல்வி வேண்டும் மருத்துவம் வேண்டும்
குடிநீர் வேண்டும் வாழ்விடம் வேண்டும்
ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கதே
ஒவ்வொரு குழந்தையும் வரமாய் வந்ததே
பெண் கல்வி உயர்ந்தால் நாடு உயரும்
பெண்ணின் உரிமை காத்தால் சமம் கிட்டும்

குடும்ப நலம் காப்போம் சிறு குடும்பமே
குழந்தைகள் எதிர்காலம் ஒளிமயமே
இரண்டு குழந்தை போதும் என்ற கொள்கை
இன்றைய தேவை நாளைய வாழ்வின் நெறி
வளரும் நாடுகள் வறுமையில் வாடுதே
வளம் இல்லா இடத்தில் பசி கொடுமை
நகரங்கள் நெருக்கி மாசு பெருகுதே
நீரும் நிலமும் குறைந்து வறட்சி வருதே
காடுகள் அழிந்து வெப்பம் கூடுதே
காற்று மாசடைந்து மூச்சு திணறுதே
மக்கள் தொகை பெருக்கம் இயற்கையை அழிக்க
மனிதம் வாழ வழி தேட வேண்டும்
இளைஞர் சக்தி நாட்டின் செல்வமே
இளைஞர்கு வேலை தந்தால் வளர்சி வருமே
வயதானோர் பாதுகாப்பு அரசின் கடமை
வயதுக்கேற்ற மருத்துவம் தேவை இன்றே
ஊர்புறம் விட்டு நகரம் நோக்கி ஓட்டம்
ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் வாட்டம்
திட்டமிட்ட குடும்பம் தேசத்தின் பலமே
திட்டமின்றி வாழ்வது துன்பத்தின் சுழலே
கல்வியே சிறந்த செல்வம் என்றார் வள்ளுவர்
கற்றவர் நாட்டை காக்கும் கவசமாவார்
பெண் குழந்தையை பேணி வளர்போம்
பெண்ணே நாளைய தாய் உலகை ஆள்வாள்
ஏழ்மை ஒழித்தால் தொகை பெருக்கம் குறையும்
ஏழைக்கு கல்வி தந்தால் அறிவு பெருகும்
சுகாதாரம் மேம்பட்டால் மரணம் குறையும்
சுகவாழ்வு கிடைத்தால் வாழ்வு சிறக்கும்
உலக நாடுகள் கைகோர்து நிற்போம்
உணவு பகிர்ந்து பசி போக்கிடுவோம்
ஐக்கிய நாடுகள் சபை விடுத்த அறைகூவல்
அனைவருக்கும் வாழ்வுரிமை எனும் குரல்
இயற்கை வளம் காக்க இன்றே உறுதி
இனிவரும் தலைமுறைக்கு இருக்கட்டும் வசதி
மரம் நடுவோம் மழை பெறுவோம்
மாசு குறைத்து தூய்மை காப்போம்
குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு தேவை
குழந்தை ஒவ்வொன்றும் நலமுடன் வாழ வேண்டும்
தாய் சேய் நலம் காக்கும் திட்டம்
தாய்நாட்டின் வளர்சிக்கு அடித்தளம்
விவசாயம் பெருகினால் பஞ்சம் இல்லை
விஞ்ஞானம் வளர்ந்தால் வறுமை இல்லை
தொழில்நுட்பம் கொண்டு வளம் பெருக்குவோம்
தொலைநோக்கு கொண்டு திட்டம் தீட்டுவோம்
அகதிகள் பிரச்சனை உலகின் கவலை
அமைதி இல்லா இடத்தில் மக்கள் அலைச்சல்
போர் ஒழிந்தால் உயிர் காக்கப்படும்
பொறுமை இருந்தால் உலகம் வாழும்
மக்கள் தொகை வெறும் எண் அல்ல
மனிதர் ஒவ்வொருவரும் சக்தி உள்ளவர்
திறமைக்கேற்ற வாய்பு கொடுத்தால்
தேசம் முன்னேற்ற பாதை காணும்
ஊனமுற்றோர் உரிமை காக்க வேண்டும்
ஊர் ஒதுக்காமல் உடன் அழைக்க வேண்டும்
பழங்குடி மக்கள் வாழ்வு மேம்பட
பாதுகாப்பு தந்து பண்பாடு காப்போம்
சிறு குடும்பம் இன்ப குடும்பம்
சிறப்பாய் வளர்போம் அடுத்த தலைமுறை
பொறுப்புடன் வாழ்ந்தால் பூமி தாங்கும்
பொறுப்பின்றி வாழ்ந்தால் புவி தவிக்கும்
ஜூலை பதினொன்று நினைவூட்டும் நாள்
ஜனத்தொகை சமநிலை காக்கும் காலம்
விழித்தெழு மனிதா விவேகத்துடன் வாழ்
விளைநிலம் காத்து வளமுடன் வாழ்
உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வு
உயிர்கள் யாவும் சமம் என்ற நிறைவு
பகிர்ந்து உண்போம் பாசத்துடன் வாழ்வோம்
பார் முழுதும் அமைதி குடிகொள்ள செய்வோம்
கல்வி ஒளி ஏற்றி இருள் போக்குவோம்
கருணை கொண்டு உலகை காப்போம்
அறிவியல் வளர்து அறம் காப்போம்
அனைவரும் வாழ அன்பு செலுத்துவோம்
மக்கள் தொகை தினம் மனதில் நிற்பதாக
மாற்றம் ஒன்றே மானுடம் வாழ்வதாக
நாம் வாழும் பூமி நலமுடன் இருக்க
நல்ல செயல் செய்து நாளை சிறக்க
எதிர்காலம் நம் கையில் உள்ளதே
ஏற்றம் தரும் முடிவு நம்மிடமே
ஒன்றிணைந்து செயல்படுவோம் உலக மக்களே
ஒளிமயமான நாளை அமைப்போம் சேர்ந்தே
வாழ்க மனிதம் வாழ்க உலகம்
வளர்க அன்பு வளர்க அமைதி
உலக மக்கள் தொகை தின வாழ்துக்கள்
உயர்ந்து நிற்கட்டும் மனித குலம் என்றென்றும்
உலக காகித பை தினம்
ஜூலை பன்னிரெண்டு உலகம் கொண்டாடும்
காகித பை தினம் விழிப்பை ஏற்றும்
பிளாஸ்டிக் வேண்டாம் பூமி காப்போம்
காகித பை ஏந்தி வாழ்வை வாழ்த்துவோம்
மரத்தின் கொடை காகிதமாய் மாறுதே
மண்ணில் மட்கி மீண்டும் உரமாகுதே
நெகிழி நூறு ஆண்டு அழியாதே
நெகிழ்ந்து போகும் பூமி நிலை கெடுதே

கடலில் மிதக்கும் பை ஆமை உயிரை குடிக்கும்
கடை வீதியில் தொங்கும் பை காற்றை மாசு படுத்தும்
நீர்வழி அடைத்து வெள்ளம் பெருக்கும்
நிலத்தில் புதைந்து வளம் கெடுக்கும்
காகித பை எளிமையின் அடையாளமே
கருணையின் சின்னம் இயற்கையின் செல்வமே
மட்கும் தன்மை கொண்ட மாபெரும் வரமே
மனிதம் வாழ வழி காட்டும் தரமே
பழங்காலம் முதல் பயன்பட்ட பொருளே
பாரம்பரியம் மீளும் பசுமையின் பொருளே
தாத்தா காலத்து துணிப்பையும் நினைவே
தலைமுறை காக்கும் காகிதமே துணையே
கடைக்கு செல்லும் போது பை எடுத்து செல்வோம்
காசு கொடுத்து நெகிழி வாங்க மறுப்போம்
சந்தையில் காய்கறி காகிதத்தில் சுமப்போம்
சந்தோஷமாய் வாழும் வழி கற்போம்
மாணவர்கள் புத்தகம் சுமக்கும் பையே
மாசில்லா கல்வியின் மாண்பின் துணையே
பரிசு பொருள் சுற்றும் அழகு காகிதமே
பாராட்டும் மனதின் பாச காகிதமே
தொழிற்சாலை பல பெருகி வேலை தருமே
தொழிலாளர் குடும்பம் வாழ்வு பெறுமே
மறுசுழற்சி செய்து மீண்டும் பயனாகும்
மரம் வளர்தால் காகிதம் குறையாது போகும்
அரசு தடை செய்தால் மட்டும் போதாது
அனைவரும் மனதில் உறுதி கொள்ள வேண்டும்
விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு தோறும் செல்ல
விலை இல்லா பையை விரும்பி ஏற்க வேண்டும்
நெகிழி தயாரிப்பு எண்ணை குடிக்கும்
நெகிழி எரிப்பு நஞ்சை கக்கும்
காகிதம் சூரிய ஒளியில் உலரும்
காற்றில் மணம் வீசி மனம் குளிரும்
சிறு வியாபாரி சிறப்பாய் வாழ
சிறு முதலில் பை தொழில் தொடங்கலாம்
பெண்கள் குழு சேர்ந்து பை தைப்போம்
பொருளாதாரம் உயர்து பெருமை சேர்போம்
ஆறு நதி கடல் காக்கும் கடமை
ஆழ்கடல் உயிர்கள் வாழும் நியதி
ஒரு பை மாற்றம் ஒரு உயிர் காக்கும்
ஒன்று சேர்ந்தால் உலகம் வாழும்
குழந்தைகள் கையில் காகித பை கொடுப்போம்
குணம் நலம் காக்கும் பழக்கம் வளர்போம்
பள்ளிகளில் போட்டி வைத்து விழிப்பு செய்வோம்
பசுமை தூதுவராய் சிறாரை மாற்றுவோம்
மரம் வெட்ட கூடாது என்று சொல்லவில்லை
மரம் வளர்து காகிதம் செய்ய சொல்கிறோம்
நிலையான வளர்சி நம் இலக்காகட்டும்
நிலம் பசுமை ஆக நாம் உழைக்கட்டும்
வெப்பம் குறைக்கும் வழி இதுவே
விவேகத்துடன் வாழும் வழி இதுவே
பிளாஸ்டிக் தவிர்பு பெரும் தவமே
பூமி தாயை காக்கும் பெரும் தர்மமே
விளம்பரம் அச்சிட்டு பையை அழகாக்கலாம்
விற்பனை கூடும் பெயரும் நிலைக்கும்
உணவு பொருள் சுற்ற உகந்த பையே
உடல் நலம் காக்கும் உயர்ந்த பையே
காற்றில் பறக்காது கனமாய் இருக்கும்
கைப்பிடி உறுதியாய் பொருளை தாங்கும்
ஈரம் பட்டாலும் எளிதில் கிழியாது
இயற்கை நமக்கு தந்த வரமாகும்
நகரம் கிராமம் வேறுபாடு இல்லை
நல்ல பழக்கம் யாவருக்கும் பொதுவே
திருவிழா கூட்டம் பை இல்லாமல் இல்லை
திரும்பி வரும் பழக்கம் இன்றே தொடங்கட்டும்
உலக நாடுகள் ஒன்றாய் குரல் கொடுக்கும்
உயிர் சுற்றுசூழல் காக்க உடன்படிக்கை செய்யும்
ஐக்கிய நாடுகள் சபையும் ஆதரிக்கும்
அனைத்து உயிரும் வாழ வழி வகுக்கும்
காகித பை தினம் வெறும் நாள் அல்ல
கடமையை நினைவூட்டும் பெரும் காலம்
இன்றே உறுதி எடுப்போம் நாமெல்லாம்
இனி நெகிழி வாழ்வில் இடமில்லை என்போம்
வீட்டில் இருந்து மாற்றம் தொடங்கட்டும்
வீதி எங்கும் பசுமை பரவட்டும்
சமூக ஊடகம் வழி செய்தி பரப்புவோம்
சாதனை படைத்து சரித்திரம் படைப்போம்
வருங்கால தலைமுறை வாழ வேண்டும்
வளமான பூமி அவர்கு சேர வேண்டும்
நாம் செய்யும் சிறு செயல் பெரிதாகும்
நாளை வரலாறு நம்மை போற்றும்
காகித பை ஏந்துவோம் கை கோர்போம்
கடமை ஆற்றி கடல் காப்போம்
மரம் வளர்போம் மழை பெறுவோம்
மாசில்லா உலகம் அமைப்போம்
ஜூலை பன்னிரெண்டு ஞாபகம் வைப்போம்
ஜனங்கள் யாவரும் சேர்ந்து வாழ்வோம்
பிளாஸ்டிக் ஒழிப்போம் பூமி காப்போம்
புதிய உலகம் படைத்து வாழ்வோம்
வாழ்க இயற்கை வாழ்க மனிதம்
வளர்க பசுமை வளர்க அமைதி
உலக காகித பை தின வாழ்துக்கள்
உயர்ந்து நிற்கட்டும் பசுமை பூமி என்றென்றும்
--
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்
பூமித்தாய் அழுகிறாள் பிளாஸ்டிக் சுமையாலே,
சாமிதான் காப்பாற்ற சிந்தையைத் திருப்புவோம்!
பூமியின் வயிற்றினில் புதைந்திடும் நஞ்சென,
தீமையைத் தருகின்ற தீயபை ஒழிப்போமே!
கடைவீதி சென்றிடும் கையினில் துணிப்பையை,
நடைமுறை ஆக்குவோம் நாளையைக் காத்திட!
இடையறா பயன்பாட்டில் இயற்கையைக் கொன்றிடும்,
கொடியதாம் பிளாஸ்டிக்கைக் கொள்ளாமல் தள்ளுவோம்!
ஒருமுறை பயன்படும் உதவாத பைகளால்,
வருமுறை தலைமுறை வாழ்விழந் தழுகின்றார்!
கருமுகில் போலவே கடலினை மூடிடும்,
பெருநோயைத் தந்திடும் பிளாஸ்டிக்கை வெறுப்போமே!
ஆமையின் கழுத்தினை அறுத்திடும் கயிறென,
தேமலாய்ப் பரவியே தெருவெலாம் நிறைந்ததே!
பூமியின் குருதியில் புகுந்திடும் நுண்ணிய,
சாம்பலாய் மாறாத சாபத்தைத் தடுப்போமே!
காற்றினில் பறந்திடும் காகிதம் போலன்று,
நூற்றாண்டு ஆனாலும் நொறுங்காது கிடக்கிறது!
மாற்றமே இல்லாமல் மண்ணினைக் கொன்றிடும்,
கூற்றுவன் போலவே கொடும்பையை ஒழிப்போமே!
மீன்களின் வயிற்றினில் மிதக்கின்ற பிளாஸ்டிக்கால்,
ஊனமாய்ப் பிறக்கின்ற உயிர்களைக் காப்போமே!
ஈனமாம் செயலினை இன்றோடு நிறுத்தியே,
தானமாய்ப் பூமிக்குத் தூய்மையைத் தருவோமே!
ஆலமர நிழலினில் அமர்ந்திடும் பறவையும்,
காலமெலாம் வாழ்ந்திடக் கனிவுடன் செயல்படு!
ஞாலமே நமதென்று நாளுமே நினைத்திடு,
சாலவே உயிர்களைச் சாகடிக் காதிரு!
வாழையின் இலையினில் விருந்துண்ட காலம்போய்,
பாழையாம் பிளாஸ்டிக்கில் பண்டமும் வைக்கின்றோம்!
வாழையும் மண்பையும் வளம்தரும் பொருளென,
வாழ்வியல் முறையினை மாற்றியே வாழ்ந்திடு!
தென்னையின் கீற்றினில் திரித்திடும் பெட்டிபோல்,
பன்னையின் கூடையில் பொருள்களைச் சுமந்திடு!
முன்னவர் வழியினில் முறையுடன் நடந்திடு,
இன்னுயிர் காத்திட ஏற்றதைச் செய்திடு!
சிறுவரும் அறிந்திடச் சீரிய கருத்தினை,
பெரியவர் விதைத்திடப் பிளாஸ்டிக் ஒழிந்திடும்!
உறுதியாய் நின்றிடு உலகுக்கு உரைத்திடு,
மறுமுறை பயன்படும் மண்பையே சிறந்ததென!
குப்பையில் குவிந்திடும் கொடியதை எரித்திடில்,
அப்புகை நஞ்சாகி அண்டத்தை அழிக்கிறது!
தப்பினை உணர்ந்திடு தரணியைக் காத்திடு,
ஒப்பிலா இயற்கையை ஒளிர்ந்திடச் செய்திடு!
நீர்நிலை தூர்ந்திடும் நெகிழியின் குவியலால்,
பார்முழு தழுகிறது பறவையும் விலங்குகளும்!
நேர்மையாய்ச் சிந்தித்து நெகிழியை விலக்கியே,
சீர்மையை உலகினில் செழித்திடச் செய்திடு!
இன்றொரு நாள்மட்டும் இல்லையெனச் சொல்லாமல்,
என்றுமே பிளாஸ்டிக்கை ஏற்காமல் வாழ்ந்திடு!
நன்றுடன் பூமிக்கு நாம்செய்யும் கடமையை,
குன்றென நிமிர்ந்திடக் கூடியே செய்திடு!
பிளாஸ்டிக் பைஇல்லாப் பேருலகம் காணவே,
சொல்லிலும் செயலிலும் சுத்தத்தை விதைத்திடு!
நல்லதோர் நாளையை நம்கையில் படைத்திட,
இல்லத்தில் தொடங்கியே இமயமும் சேர்ந்திடு!
--
தேசிய காட்டுத் தீயணைப்பு தினம்
காட்டினில் தீப்பற்றி கனன்றிடும் நேரத்தில்,
நாட்டினைக் காத்திட நல்லவர் ஓடுவார்!
வீட்டினை மறந்தவர் வீரராய் நின்றவர்,
காட்டுத் தீயணைப்போர் காவலர் ஆவரே!
பச்சையாம் வனத்தினைப் பாழாக்கும் நெருப்பினை,
அச்சமின் றணைத்திட அனலினில் பாய்வரே!
இச்சையாய் உயிரினை இழந்திடத் துணிந்தவர்,
நிச்சயம் தெய்வத்தின் நிழலென வாழ்பவர்!
புல்லுமே எரிந்திடும் பெருந்தீயின் முன்னிலை,
கல்லுமே உருகிடும் கடுங்கனல் வெம்மையில்!
எல்லையைக் கடந்ததோர் ஏற்றமாம் தொண்டினை,
நல்லவர் செய்கிறார் நாட்டுக்காய் வாழ்வரே!
உடலினை வருத்தியே உறக்கமும் துறந்தவர்,
கடமையை முடித்திடக் கனலினில் கரைகிறார்!
இடர்வரும் நேரத்தில் இதயத்தை இரும்பாக்கி,
அடர்வனம் காத்திட அனலுடன் போரிடும்!
மான்களும் மயில்களும் மரங்களும் வாழ்ந்திட,
தேன்களும் சேகரிக்கும் தேனீக்கள் பிழைத்திட,
வான்மழை பொழிந்திட வளம்பெறும் பூமியை,
தீயினில் இருந்துமே திரும்பவும் மீட்பவர்!
புகையினில் மூச்சடைத்துப் பொசுங்கியே வீழ்ந்தாலும்,
மிகையிலா வீரத்தால் மீண்டுமே எழுவரே!
நகையினை இழந்தாலும் நாட்டினை இழக்காமல்,
சகிப்புடன் போராடும் சக்தியின் வடிவமே!
தீயினை அணைத்திடத் தீரமாய்ச் செல்பவர்,
நோயினைப் போக்கிடும் நொடியினில் வல்லவர்!
பேயினைப் போல்வரும் பெருந்தீயின் முன்னின்று,
தாயினைப் போலவே தரணியைக் காப்பவர்!
குன்றிலும் மலையிலும் குதித்திடும் தீச்சுடர்,
அன்றிலும் இன்றிலும் அழிக்காமல் காப்பவர்!
வென்றிடும் தீயினை வியர்வையால் நனைத்தே,
நின்றிடும் வீரரை நெஞ்சினில் வைப்போமே!
பருவநிலை மாற்றத்தால் பற்றியே எரிகையில்,
உருவநிலை பாராமல் ஓடியே அணைப்பவர்!
கருகிய காட்டினைக் கனவென மாற்றவே,
ஒருகணம் தயங்காமல் உயிரையே தருபவர்!
அடர்ந்திடும் காட்டினில் அழிவினைத் தடுப்பவர்,
தொடர்ந்திடும் தலைமுறைக்குத் தூய்மையைக் கொடுப்பவர்!
இடர்வரும் காலத்தில் இன்னுயிர் ஈந்தவர்,
கடவுளின் பிள்ளைகள் காவலர் ஆவரே!
தீயணைக் கருவியைத் தோளினில் சுமந்தவர்,
நோயுற்ற வனத்திற்கு நோய்தீர்க்கும் மருத்துவர்!
வாயுவின் வேகத்தை வலிமையால் வென்றவர்,
தூயவர் தொண்டினைத் தூக்கியே போற்றுவோம்!
தேசிய தினமிது தீரரை நினைந்திட,
நேசமாய் அவர்களின் நினைவினை ஏந்திட,
வாசமாம் காட்டினை வாழ்விக்கும் வீரர்கு,
ஓசையாய் வாழ்த்தினை உளமாரச் சொல்வோமே!
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்
இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!
வியட்நாமில் பரிதாபம்.. சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 15 இந்தியர்கள் பலி
"இதுதான் உண்மையான மாற்றம்!" தமிழக அரசின் செயல்பாட்டிற்கு கோர்ட் பாராட்டு
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!
{{comments.comment}}