- டாக்டர் கோ. லதா
மலையும் மடுவும் மலரும் வனமும்
மலர்ந்திடும் வானும் மலிந்த கடலும்
இயற்கை தந்த இனிய கொடைகள்
இன்பம் பொழியும் இறைவன் படைப்பு
ஆறு குளிர்ந்து அழகாய் ஓடும்
ஆடி முடிக்கும் அலைகள் பாடும்
காற்று தழுவும் கதிரவன் ஒளி
கானகம் எங்கும் களிநடம் புரியும்
மழையின் துளியில் மண்மணம் கமலும்
மரங்கள் செழிக்க மகிழ்ச்சி பொங்கும்
உயிர்கள் யாவும் ஒன்றாய் வாழும்
உலகின் அழகு இயற்கை தானே
--

மௌனமும் பழகிடு
சொல்லும் செயலும் சுழன்றிடும் வேளை
சோர்வு வரும் சற்றே நிறுத்து
மௌனம் பழகு மனதை தெளிவாய்
மாசு அகற்றும் மருந்தது தானே
ஆரவாரம் அகன்றிடும் நேரம்
ஆழ்மனம் பேசும் அமைதி கேளாய்
கூச்சல் கடந்து குரலொலி வந்து
குவலையும் காக்கும் குருவாய் திகழும்
வார்த்தை வீணாய் வளர்ந்திடும் போது
வாய்மூடி இரு வலிமை பெருகும்
எண்ணம் தெரிய எரிமலை அடங்கும்
இறைவன் அருள் இதயம் நிறையும்
பேசிப் பேசிப் பெரிதும் கெடுத்த
பேதமை நீங்கப் பேரமைதி நாடு
மானிடம் உய்யும் மகத்துவம் காண்பாய்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
{{comments.comment}}