என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

Jul 11, 2025,05:10 PM IST
விருத்தாச்சலம்: எனது வீட்டில், நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை யாரோ வைத்துள்ளனர். அதை வைத்தது யார், யாருக்காக ஒட்டுக் கேட்டார்கள் என்பதை விசாரித்து வருகிறோம். சீக்கிரமே அதைக் கண்டுபிடிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



பாமகவுக்குள் நிலவி வரும் குழப்பங்களும், சண்டையும் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புதுப் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் தனது வீட்டிலேயே தன்னை ஒட்டுக் கேட்புக் கருவி வைத்து ஒட்டுக் கேட்டதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

விருத்தாச்சலம் வந்திருந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதை வைத்தது யார், எதற்காக வைத்தார்கள், வைக்கச் சொன்னது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில்தான் தலைவர்களை, கட்சியினரை சந்திப்பது வழக்கம். அந்த இடத்தில்தான் ஒட்டுக் கேட்புக் கருவி வைக்கப்பட்டதாக தற்போது அவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்