அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

Aug 06, 2025,06:05 PM IST

சென்னை : ஆகஸ்ட் 9ம் தேதி டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பாமக.,வில் கடந்த சில மாதங்களாகவே அப்பா-மகன் இருவரில் யாருக்கு கட்சியில் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக மோதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆகஸ்ட் 17ம் தேதி பாமக பொதுக் குழு கூட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு போட்டியாக ஆகஸ்ட் 09ம் தேதி எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணியும் அறிவித்தார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அன்புமணி தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஆனால் அதற்கு இதுவரை அன்புமணி தரப்பில் இருந்து மறுப்போ, பதிலோ தெரிவிக்கவில்லை.




இந்நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி அன்புமணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னை தானே தலைவர் என சொல்லிக் கொண்டு இருக்கும் அன்புமணி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொதுக் குழுவை அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 28ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது என கடுமையான வாதங்கள் பலவும் முன் வைக்கப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில், அன்புமணி எந்த வகையிலும் கட்சியில் உரிமை கோர முடியாத வகையில் கட்சியின் சட்டங்கள் மற்றும் விதிகளில் மாற்றம் கொண்டு வர ராமதாஸ் முடிவு செய்துள்ளாராம். மொத்த அதிகாரமும் தனக்கு மட்டுமே இருக்கும் வகையில் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். அதோடு அன்புமணிக்கு எதிராக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 


ஏற்கனவே அன்புமணி தலைவர் கிடையாது என்றும், ராமதாஸ் என்ற தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் ராமதாஸ் கடுமையாக கூறி இருந்தார். இதனால் தேவைப்பட்டால் பொதுக் குழுவில் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 


அன்புமணியின் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தந்தையின் மனுவை எதிர்த்து அன்புமணியும் மனுத்தாக்கல் செய்யலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கோர்ட்டின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள கட்சி தொண்டர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

news

அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

news

ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்