சென்னை : பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்த 16 குற்றச்சாட்டுக்களுக்கும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கட்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.
கோர்ட்டின் அனுமதியுடன் பாமக தலைவர் என்ற முறையில் ஆகஸ்ட் 09ம் தேதி அன்புமணி தலைமையில் போட்டி பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவித்த படி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ம் தேதி நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக இதுவரை ராமதாஸ் சொல்லி வந்த குற்றச்சாட்டுக்கள், பாமக கட்சியின் தரவுகளில் ஏற்றப்பட்டது.
ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது, கட்சியை பிளவு படுத்த முயற்சித்தது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுக்கள் அன்புமணிக்கு எதிராக முன் வைக்கப்பட்டது. இந்த 16 குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க 8 பேர் கொண்ட பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவின் உறுப்பினர்களையும் மேடை ஏற்றி, பொதுக்குழுவிலேயே அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ராமதாஸ்.
அதோடு அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி குறித்து பேசுவதற்கும், வேட்பாளர்களை முடிவு செய்து, அவர்களை முன்மொழியும் படிவங்களில் கையெழுத்திடுவது, தேர்தல் கமிஷனிடம் கட்சியின் சின்னம் உள்ளிட்டவைகள் குறித்து கோரிக்கை வைப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனரான ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தங்கள் குறித்த விபரங்கள் தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அன்புமணிக்கு எதிராக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறி எந்த குற்றச்சாட்டிற்கும் அன்புமணி தரப்பில் இருந்து எதிர்ப்போ, மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை. தற்போது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என்பது சந்தேகம் தான். ஒருவேளை ஆகஸ்ட் 31ம் தேதிக்கும் அன்புமணி பதிலளிக்கவில்லை என்றால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட வாய்ப்புள்ளது.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஏற்கனவே அன்புமணிக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை தான் நிறைவேற்றி தீர்மானங்களின் மூலம் சொல்லி விட்டார் ராமதாஸ். அதே போல், வழக்கமாக பாமக.,வின் அனைத்து கூட்டங்களிலும் ராமதாசிற்கு வலது புறம் அன்புமணி தான் அமர்வார். ஆனால் தற்போது நடத்தப்பட்ட கூட்டத்தில் அன்புமணி இடத்தில், ராமதாசிற்கு வலப்புறம், ராமதாசின் மூத்த மகள் காந்திமதி தான் அமர்ந்திருந்தார். இதனால் இனி காந்திமதி கட்சியில் அன்புமணிக்கு பதில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பதையும் சூசகமாக சொல்லி விட்டார் ராமதாஸ்.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்காவிட்டால் அவரை கட்சியில் இருந்து முழுவதுமாக நீக்கி, அது தொடர்பான ஆவணங்களையும் தேர்தல் கமிஷனிடம் ராமதாஸ் அளிப்பார். அப்படி அளித்தால் அது அன்புமணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும். அவர் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதிலும் சிக்கல் ஏற்படும். தனிக்கட்சி துவங்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் ராமதாஸ், பாமக.,வை தேர்தலை நோக்கி நகர்த்திக் கொண்டு செல்லும் வேளையில் அன்புமணி தனிக்கட்சி துவங்கி, அதற்கு ஆதரவு திரட்டி, தேர்தல் கமிஷனிடம் அங்கீகாரம் பெறுவதில் பெரும் சிக்கல்கள் ஏற்படலாம். அப்படியே துவக்கினாலும் அது பலன் தருமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி தான்.
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
தொடர்ந்து 10வது நாளாக குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!
Weight loss tips: எந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்?
{{comments.comment}}