சென்னை: அன்புமணிக்கு தலைமை பண்பு அறவே இல்லை. நான் தான் தவறு செய்து விட்டேன். மத்திய கேபினட் அமைச்சர் ஆக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். வளர்த்த கிடாவான அன்புமணி என் மார்பில் பாய்ந்து விட்டார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ஒரு பரபரப்பான பேட்டி அளித்தார். பாமகவினரை அதிர வைத்து விட்டது இந்த பேட்டி. பேட்டியின்போது தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து டாக்டர் ராமதாஸ் கூறிய தகவல்கள்:
நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணியின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும், திசை திருப்புகிறது. தவறு செய்தது அன்புமணி அல்ல. எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அன்புமணியை மத்திய கேபினட் அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். என்ன தவறு செய்து விட்டேன் என என்னை குற்றவாளியாக மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்களிடமும் அடையாளம் காட்டி அனுதாபத்தை பெற முற்றிலும் திசை திருப்ப முயற்சிக்கிறார். நான் அதற்கு பதில் அளிக்க தானே ஆக வேண்டும்.
தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடத் தொடங்கியது அன்புமணி தான். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுவில் மேடை நாகரிகம் எதுவுமே இல்லாமல் நடந்து கொண்டது யார்..?சபை நாகரிகம் எதையும் கடைபிடிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பொது வெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்..? எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்தேன்.முகுந்தனை இளைஞர் அணி செயலாளராக நியமித்த போது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா..? அன்புமணி மைக்கை டேபிள் வீசியது என் தலையில் வீசியது போல் இருந்தது.
பனையூரில் அலுவலகம் திறக்கிறேன்; அங்கே வந்து என்னை சந்தியுங்கள் என சொன்னது சரியா..? நான்கு சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்து தாயைத் தாக்க முயன்றவர். யார் உழைத்த கட்சி பாமக. பாமக என்னும் அழகான கட்சியை கண்ணாடி போல் ஒரே நாளில் நொறுக்கி விட்டார். யார் யாருக்கு உத்தரவிடுவது. நான் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கட்சியை நிர்வாகிகளை பங்கேற்க விடாமல் தடுத்துவிட்டார். பாமக வளர்ச்சிக்கு இடையூறாக பல தவறுகளை செய்து விட்டார். கட்சியின் யாருடைய ஆலோசனைகளையும் அன்புமணி ஒருநாளும் ஏற்றதில்லை.
அதிமுகவோடு கூட்டணிக்கு சொல்லுங்கள் என நான் சொன்னேன். ஆனால் அன்புமணியும், சௌமியாவும் என் கால்களை பிடித்து கொண்டு பாஜகவோடு தான் கூட்டணி வைக்க வேண்டும் என கூறினார்கள். வேறு வழியின்றி சம்மதித்திருந்தேன். அதிமுகவோடு சேர்ந்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும். அவர்களும் ஆறு ஏழு இடங்களுக்கு மேலே ஜெயித்திருப்பார்கள்.
அன்புமணிக்கு தலைமை பண்பு அறவே இல்லை. அன்புமணி பக்குவப்படவில்லை என எல்லோரும் கூறினார்கள். அன்புமணி தான் தவறு செய்து தவறான ஆட்டத்தை துவங்கியிருக்கிறார். அன்புமணியின் இந்த செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}