சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்து, டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒட்டுக்கேட்டதாக 2 நாட்களுக்கு முன் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் அடுத்த அதிரடியாக, ராமதாசின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், தைலாபுரம் வீட்டிற்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பது குறித்து சிசிடிவி கேமிரா வைத்து உளவு பார்க்கப்பட்டதாகவும் அவரது உதவியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஆகஸ்ட் 17ம் தேதி பட்டனூரில் நடக்கும் பாமக பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு டாக்டர் ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம் கட்சியினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சமயத்தில் அன்புமணி ராமதாஸ், ஆகஸ்ட் 9 ம் தேதி தனது தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால் இவர் நடத்தும் நடைபயணத்திற்கு தடை விதிக்க போலீசிலும், பொதுக்குழுவிற்கு தடை விதிக்க தேர்தல் கமிஷனிடமும் முறையிட ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்காக தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், இந்த விவகாரம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கும் அளவிற்கு சென்று விட்டார். அன்புமணி ராமதாஸ் மீது ராமதாஸ் தொடர்ந்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார். இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அன்புமணி ராமதாஸ் கட்சி தனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை காட்ட அடுத்தடுத்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் ராமதாஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள், அன்புமணி ராமதாசிற்கு கட்சியினரிடமும், மக்களிடமும் இருக்கும் செல்வாக்கை சரிக்கும் விதமாக இருப்பதால் கட்சிக்குள் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
அன்புமணி ராமதாசிற்கு எதிராக இன்னும் பல அதிர்ச்சி தகவல்களையும், குற்றச்சாட்டுக்களையும் பகிரங்களாக போட்டு உடைக்கும் மனநிலைக்கு ராமதாஸ் வந்து விட்டதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தனது இத்தனை கால அரசியல் அனுபவத்தை வைத்து, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சி மற்றும் கட்சி சின்னத்தின் மீது அன்புமணி ராமதாஸ் உரிமை கோராமல் இருப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து விட்டாராம் ராமதாஸ். இதற்கிடையில் ரகசியமாக தமிழகத்தின் பிரதான கட்சியுடன் கூட்டணியை பேசி, ஏறக்குறைய முடிவும் செய்து விட்டாராம். விரைவில் நல்ல செய்தி வரும் என கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.
கூட்டணியை உறுதி செய்து விட்டது மட்டுமல்ல அன்புமணி ராமதாஸ் எந்த கூட்டணிக்கும் செல்ல முடியாத அளவிற்கு வலுவாக கேட் போட்டு வைத்திருக்கிறாராம் ராமதாஸ். இதனால் எந்த பக்கமும் திரும்ப முடியாத அளவிற்கு அன்புமணிக்கு நெருக்கடி நிலை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ராமதாஸ் அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை அறிவித்திருப்பதால் அந்த கூட்டம் நடக்கும், அதை தடுக்க ராமதாஸ் என்ன செய்ய போகிறார்? இதற்கு அன்புமணியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? பாமக.,வின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}