சென்னை: மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியில் 3வது முறையாக ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரிப்பது எளிதான ஒன்றல்ல. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மட்டும் தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி அவர்கள், நேருவுக்கு அடுத்தபடியாக அந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது பிரதமர் ஆவார்.
இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நரேந்திர மோடி அவர்கள், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் பயனாக உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த இலக்கையும் மோடி அவர்கள் நிச்சயம் வென்றெடுப்பார்.
தமிழ்நாடு எதிர்பார்க்கிறது
மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து இந்த நாடு, குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில் மாநில ஒதுக்கீடு வழங்குதல், நீட் விலக்கு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை அதிகரித்தல் போன்றவை சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது.
இந்தக் கோரிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி ராமதாஸ் வெல்லும் நிலைக்கு வந்து மயிரிழையில் தோல்வியைத் தழுவினார் என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை செளமியா அன்புமணி வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சராகியிருக்கக் கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!
விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!
நவராத்திரி 2025.. 9 நாள் தசரா விழாவின் சிறப்புகள்!
ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி
சவரன் ரூ. 83,000த்தை நெறுங்கும் தங்கம்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஜிஎஸ்டி 2.0.. நவராத்திரியில் அமலுக்கு வந்த புதிய வரிவிகிதங்கள்.. எதெல்லாம் விலை குறையும்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 22, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் ராசிகள்
{{comments.comment}}