சென்னை: நான் தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருந்து வருகிறார் டாக்டர் தமிழிசை. தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சன் செய்தி சானலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.
எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம்தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் டாக்டர் தமிழிசை. கடைசியாக அவர் 2019 லோக்சபா தேர்தலில் அவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அவர் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
டாக்டர் தமிழிசை தென் சென்னை தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}