Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!

Oct 29, 2024,06:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 
6.27 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வழக்கம் போல பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.07 கோடியாக உள்ளது.  பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேர் ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் - 6,27,30,588
பெண் வாக்காளர்கள் - 3,19,30,833
ஆண் வாக்காளர்கள் - 3,07,90,791
மாற்றுப்பாலினத்தவர்கள் - 8,964

அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட  தொகுதி



சோழிங்கநல்லூர் - 6,76,133 பேர்

குறைந்த பட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி

கீழ்வேளூர் ( நாகப்பட்டனம்) - 1,73,230 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி 1ம் தேதி புதிய வாக்காளராக  18 வயது பூர்த்திக்கான நாளாக வைத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்த பணிகளை பின்பற்றுவதற்கு வசதியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி 1ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியாகக் கூடியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகவரி திருத்தம், பழைய முகவரியில் இருந்து பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை இந்த காலகட்டத்தில் எளிதாக மேற்கொள்ளலாம். அதற்கு வசதியாக தமிழகம் முழுவதிலும் 69,000 த்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நவம்பர் 16,17, மற்றும் 23,24 ஆகிய சனி மற்றும் ஞாயிறுகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்