வெகேஷனுக்குப் போன ஊழியர்களை.. "டிஸ்டர்ப்" செய்தால்..  ரூ. 1 லட்சம் அபராதம்!

Jan 13, 2023,11:21 AM IST
மும்பை:  விடுமுறையில் யாராவது ஊழியர்கள் போகும்போது அவர்களை தொந்தரவு செய்து வேலை செய்யுமாறு கூறினால், அவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மும்பையைச் சேர்ந்த ட்ரீம்11 என்ற பேன்டசி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



மும்பையைச் சேர்ந்த ட்ரீம்11 என்ற நிறுவனம் பேன்டசி ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 

அதில்,யாரேனும் விடுமுறையில் போனால், சுற்றுலா சென்றால், அவர்களை சக ஊழியர்களோ, மேலதிகாரிகளோ தொந்தரவு செய்யக் கூடாது. போன் செய்து வேலை பார்க்குமாறு கேட்கக் கூடாது. அப்படி யாரேனும் கேட்டால் அவர்களுக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பவித் சேத் கூறுகையில், 2008ம் ஆண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு வாரம் கட்டாயம் ஒவ்வொரு ஊழியரும் விடுமுறை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் கண்டிப்பாக அமல்படுத்தி வருகிறோம்.

வருடத்திற்கு ஒரு வாரம், நீங்கள் உங்களது ரொட்டீன் வேலையிலிருந்து விடுபட வேண்டும்.  இமெயில் பார்க்காதீங்க, போன் அட்டென்ட் பண்ணாதீங்க.. சந்தோஷமாக குடும்பத்துடன் நிம்மதியாக, சுதந்திரமாக இருக்க வேண்டிய நாட்கள் இவை. இதுதான் உங்களை தொடர்ந்து எனர்ஜியுடன் வைத்திருக்க உதவும். பிசினஸிலும் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட உதவும்.

இந்த முறையானது எங்களது அலுவலகத்தில் தொடர்ந்து நல்லபடியாக செயல்படுகிறது. நல்ல ரிசல்ட்டையும் கொடுத்து வருகிறது. இந்த விடுமுறைக் காலத்தில் ஊழியர்கள் யாரும் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்றார் அவர்.

உண்மையில் இது நல்ல ஐடியாதான். விடுமுறையும் கொடுத்து விட்டு, பின்னாடியே போன் செய்து அதைப் பண்ணிடுங்க.. இதுப் பார்த்துடுங்க.. அதை முடிக்கலையா.. அட என்னப்பா நீ.. லீவா இருந்தா என்ன.. ஒரு நிமிஷத்துல இதை செஞ்சுடலாமே என்று அனத்தி எடுக்கும் "அச்சுப்பிச்சு"க்களுக்கு இது ஆப்படிக்கும் உத்தரவுதான்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்