தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு..  ட்ரெடிஷனல் டிரஸ் தான் போடனுமாம்.. பாத்துக்கோங்க!

Dec 01, 2023,12:21 PM IST
தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோவிலில்  ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கோவிலில் பலகை வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் தான் அணியனுமாம். பெண்கள் தாவணி, சேலை, சுடிதார் தான் கட்டணுமாம். பக்தர்களிடையே இதற்கு கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில் தலங்களில் ஒன்றாகும். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு அற்புத சான்றாக இக்கோவில் திகழ்கிறது. மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும், பாரம்பரிய சின்னமாகவும் இக்கோயில் திகழ்கிறது. இக்கோவில் கட்டப்பட்டு 1013 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியானால் இக்கோயிலின் வயதும் 1013. இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் பழமை மாறாமல் கம்பீரமாக காட்சிளிக்கிறது.

உலக அளவில் புகழ் பெற்று இக்கோவில் விளங்குகிறது. ஆதலால் கோவிலை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஒரு சிலர் அணிந்து வரும் ஆடைகள் பார்ப்பவர்களை முகம் கோணச் செய்தது. இதன் காரணமாக  பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில்,  தற்போது ஆடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பாக ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில், ஆண்கள் வேட்டி, சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வரலாம். பெண்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை, தாவணி மற்றும் சுடிதாருடன் ஷால் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய ஆடை கட்டுப்பாடுகளால் நமது பாரம்பரியம் கட்டி காக்கப்படும் என்றும் பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வளர்ந்து வரும் நாகரீக உலகில் மாடன் டிரஸ் என்று குண்டக்க மண்டக்க ஆடை அணிந்து வருகின்றனர். இப்படி இருக்கும் காலத்தில், அட்லீஸ்ட் கோவில்களிலாவது ஆடை கட்டுபாட்டை சரியாக பின்பற்றினால் நல்லது தானே மக்களே.

கட்டுக்கடங்காமல் ஒன்று போகும்போதுதான் அங்கு கட்டுப்பாடு என்ற ஒன்று தேவைப்படுகிறது.. எதுவுமே கட்டுக்குள் இருந்தால் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும் வேலை இல்லாமல் போய் விடும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்