நியூயார்க்: அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் 43 வயதான ஆபாசப் பட நடிகையும், அவரது காதலரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெஸ்ஸி ஜேன்.. 43 வயதாகும் இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையாவார். ஓக்லஹாமாவில் வசித்து வந்தார். இவரது காதலர் பெயர் பிரெட் ஹாசன்முல்லர். இவர் ஒரு காலத்தில் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். பின்னர் நடிக்க வந்தார்.. ஆனால் ஆபாசப் பட நடிகையாகி விட்டார். மிகவும் காஸ்ட்லியான ஆபாசப் பட நடிகையாக வலம் வந்தார்.
சமீப காலமாக இவர் போதைக்கு அடிமையாகி விட்டார். போதைப் பொருட்களை அதிக அளவில் எடுத்து வந்துள்ளார். இவருக்கும், இவரது காதலருக்கும் எப்போதும் போதையில் இருப்பதே பொழுது போக்கு என்றாகி விட்டது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று அதிக அளவில் போதைப் பொருட்களை பயன்படுத்தி இருவரும் உயிரிழந்த நிலையில் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெஸ்ஸியின் சொந்த ஊர் டெக்ஸாஸ் ஆகும். டேவிட் பிரைடல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு அவர் மாடலிங்கும் செய்துள்ளார். 2003ம் ஆண்டு அவர் ஆபாசப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பேவாட்ச் சீரியலிலும் கூட அவர் நடித்துள்ளார். ஆனால் அதில் அவரது ரோல் மிக சிறிதானது.
ஜெஸ்ஸியின் இயற் பெயர் சிந்தியா ஆன் ஹோவெல். 1980ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பிறந்த அவரது குடும்பம், டெக்சாஸிலிருந்து இடம் பெயர்ந்து ஓக்லஹாமாவுக்கு வந்து செட்டிலானது. இதனால் ஜெஸ்ஸி சிறு வயதிலிருந்தே ஓக்லஹாமாவில்தான் வளர்ந்தார்.
பிளேபாய் சானலுக்காக 2 ஷோக்களையும் இவர் நடத்தியுள்ளார். நாட்டி அமெச்சூர்ஸ் ஹோம் வீடியோஸ் மற்றும் நைட் கால்ஸ் என்ற அந்த இரு ஷோக்களும் பிரபலமானவை. அதற்காக அவருக்கு நிறைய விருதுகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. சில ஹாலிவுட் படங்களிலும் கூட தலை காட்டியுள்ளார் ஜெஸ்ஸி. 2007ம் ஆண்டு முதல் ஆபாசப் படங்களிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஜெஸ்ஸி.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}