சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூபாய் 400க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முருங்கைக்காயின் வரத்து குறைவே இதற்கு முக்கிய காரணமாக வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இனி சம்பார் வைக்க முருங்கைக்காயை வாங்க முடியாது போல என்று முருங்கைக்காய் பிரியர்கள் புலம்பி வருகின்றனர். ஒரு காலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓசியாக கொடுத்துக் கொண்டிருந்த இந்த காய் தற்போது காசு கொடுத்து கூட வாங்க முடியாத நிலையாக மாறி விட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் விவசாயத்தை பேணி காக்காதது தான் போலும். இன்றைக்கு முருங்கைக்காய்க்கு வந்த நிலை நாளை மற்ற காய்கறிகளுக்கும் வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
05.12.2024 இன்றைய காய்கறி விலை....
தக்காளி ரூ 60-100
இஞ்சி 60-130
பீன்ஸ் 30-50
பீட்ரூட் 30-55
பாகற்காய் 40-60
கத்திரிக்காய் 30-60
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 15-30
குடைமிளகாய் 20-55
மிளகாய் 40-60
கேரட் 40-70
காளிபிளவர் 20-40
சௌசௌ 25-50
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-90
பூண்டு 220- 540
பச்சை பட்டாணி 150-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 30-40
வெண்டைக்காய் 30-60
மாங்காய் 30-60
மரவள்ளி 30-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 40-80
சின்ன வெங்காயம் 50-80
உருளை 40-80
முள்ளங்கி 20-30
சேனைக்கிழங்கு 20-40
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 20-45
முருங்கைக்காய் 400-420
வாழைக்காய் (ஒன்று) 3-7
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}