சென்னை: தமிழகத்தில் இயல்பை விட அடுத்த ஐந்து தினங்களுக்கு மூன்று முதல் ஐந்து டிகிரி வரை வெப்பநிலை உயருமாம். அதே வேளையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. இந்த வெப்பநிலையையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. இன்னும் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மூன்று முதல் ஐந்து டிகிரி வரை வெப்பநிலை உயருமாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என அறிவித்துள்ளது.
மழை நிலவரம் (20.4.2024 முதல் 23.4.2024)
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும்.
கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அப்போது இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் சொல்ல வேண்டாம் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
20.4.2024 முதல் 26.4.2024 வரை:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகமாக 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும். அதே வேளையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடுமாம். அப்போது அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌரியம் ஏற்படலாம்.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சம் வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?
Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!
ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்
பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு
பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்