சென்னை: அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு ஒரே நேரத்தில் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதே எனது கடமையாக கருதுகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இனிது இனிது காதல் இனிது திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பவர். இது தவிர இவருடைய பாடல்கள் பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 21 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி ரசிகர்கள் ஒன்றாக கூடும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது இவருடைய சிறப்பு.
இவரின் அதிரடி இசையில், இவர் இசையமைக்கும் அனைத்துப் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒட்டு மொத்த திரை உலகையே ஈர்த்துள்ளது. இவரை ரசிகர்கள் செல்லமாக டிஎஸ்பி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் இவர் இசையமைத்து வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் ஹிட் கொடுத்தது. இது இவருடைய சாதனைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
இவருடைய இசையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமே ரசிப்பது மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் ரசித்து கொண்டாடி வருகின்றனர். இவருடைய இசை கடல் கடந்து வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புகழ்பெற்றிருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். அதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படம், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்தினம் திரைப்படம், மற்றும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 ஆகிய படத்திற்கு இசையமைத்து வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இது தவிர ஹரிசங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத்சிங், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் தாண்டேல், புது முகங்கள் நடிக்கும் ஜூனியர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இசைஞானி இளையராஜாவின் அதிதீவிர பக்தரான தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கு, சமீபத்தில் இளையராஜா நேரில் சென்று வாழ்த்தி உள்ளார். இது அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு எனது மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதே எனது கடமையாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!
மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்!