சென்னை: ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் அன்னதானத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுத கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்பட உள்ளது. 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளாகும். முதல்வரின் பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு வருடம் முழுவதும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு தினமும் உணவளிக்கும் வகையில் அமுத கரங்கள் என்ற திட்டத்தை இன்று முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவினை தொடங்கி வைத்த பிறகு துர்கா ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா உணவு வழங்கினார்கள். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365நாட்களும், இந்த திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 29, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
வாழ்வது ஒரு கலை!
மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!
எனதருமை எழுதுகோலே...!
பாடம்!
படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்! (பழமொழியும் உண்மை பொருளும்)
சிரிங்க சிரிங்க.. நல்லா சிரிங்க.. Laughter is the best medicine!
அக்னி சிறகுகள்.. சிந்தனைக்கு தீப்பொறி கொடுத்த வாழ்க்கை வரலாறு
{{comments.comment}}