சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கி நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அதிகாலை முதல் சோதனை :
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் குடியிருப்புக்கு இன்று அதிகாலையிலேயே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தங்களது சோதனையைத் தொடங்கினர். வீட்டின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்கள் மற்றும் சில திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் 13 இடங்களில் வளையம் :

சென்னை மட்டுமின்றி, எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்கள், அவரது உறவினர்கள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் என மொத்தம் 13 இடங்களில் இந்தச் சோதனை நீடித்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அவரது முக்கிய முகவரிகளில் அதிகாரிகள் ஆவணங்களை தீவிரமாக சரிபார்த்து வருகின்றனர். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை மையமாக வைத்தே இந்தச் சோதனை திட்டமிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் போது முக்கிய டைரிகள், கணினிகள் மற்றும் சில டிஜிட்டல் சான்றுகள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தின் முன்பாக குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}