வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்

Aug 09, 2025,03:37 PM IST

டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடந்து வருகிறது. இது தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் இதுவரை எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புகார்கள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் இருந்தும், எந்த புகாரும் வரவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


பீகாரில் சிறப்பு திருத்தப் பணி தொடங்கியதில் இருந்து, மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த திருத்தப் பணியின் மூலம் நிறைய வாக்காளர்கள் பெருமளவில் நீக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தகுதியான எந்த வாக்காளரும் விடுபட மாட்டார்கள் என்றும், தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.


இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இதுவரை 6,257 புகார்கள் வந்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் 36,060 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 




புகார்கள் வந்த ஏழு நாட்களுக்குள் தேர்தல் அதிகாரிகள் அதை சரிபார்க்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் இருந்து, தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி, காரணங்களை சொன்ன பிறகுதான் ஒரு பெயரை நீக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுடன் சேர்ந்து "வாக்குகளை திருடுவதாக" குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். கர்நாடகாவின் மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. வந்துள்ள 6,257 புகார்களும் வாக்காளர்களிடமிருந்து வந்தவை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்

news

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்

news

தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!

news

ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!

news

திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!

news

32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!

news

புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது

news

டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்