சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை ஜூலை 7ம் தேதி தொடங்குகிறார். அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் இப்போதே அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டன. போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் இப்போதிருந்தே கட்சிகள் தங்களது பணிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஏற்கனவே உறுதியானதாக உள்ளது. அதில் சில முனுமுனுப்புகள் இருந்தாலும் கூட கூட்டணியில் பெரிதாக பிளவு ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மறு முனையில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. அதில் தற்போது பாஜக மட்டுமே இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்தக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். மறுபக்கம், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் மலரும் என்று பாஜக தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது தமிழக சுற்றுப்பயணத்தை ஜூலை 7ம் தேதி கோவையிலிருந்து தொடங்குகிறார். மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமானது என்பதால் அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை முதலில் தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி. முதல் கட்டத்தில் கோவையில் தொடங்கி தஞ்சாவூரில் முடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இந்த சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கவுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயண விவரம்:
| தேதி | மாவட்டம் | சட்டசபைத் தொகுதிகள் |
| ஜூலை 7 | கோவை புறநகர் வடக்கு | மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் |
| ஜூலை 8 | கோவை மாநகர் | கோவை வடக்கு, கோவை தெற்கு |
| ஜூலை 10 | விழுப்புரம் | விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் |
| ஜூலை 11 | விழுப்புரம் | வானூர், மயிலம், செஞ்சி |
| ஜூலை 12 | கடலூர் வடக்கு | பண்ருட்டி |
| ஜூலை 12 | கடலூர் தெற்கு | நெய்வேலி |
| ஜூலை 14 | கடலூர் தெற்கு | குறிஞ்சிப்பாடி |
| ஜூலை 14 | கடலூர் மேற்கு | புவனகிரி |
| ஜூலை 14 | கடலூர் கிழக்கு | சிதம்பரம் |
| ஜூலை 14 | கடலூர் கிழக்கு | சிதம்பரம் |
| ஜூலை 15 | மயிலாடுதுறை | சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை |
| ஜூலை 16 | திருவாரூர் | நன்னிலம், திருவாரூர் |
| ஜூலை 16 | நாகப்பட்டினம் | கீழ்வேளூர் |
| ஜூலை 17 | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம், வேதாரண்யம் |
| ஜூலை 17 | திருவாரூர் | திருத்துறைப்பூண்டி |
| ஜூலை 18 | திருவாரூர் | மன்னார்குடி |
| ஜூலை 18 | தஞ்சாவூர் கிழக்கு | திருவிடைமருதூர், கும்பகோணம் |
| ஜூலை 19 | தஞ்சாவூர் மேற்கு | பாபநாசம் |
| ஜூலை 19 | தஞ்சாவூர் மத்தியம் | தஞ்சாவூர் |
| ஜூலை 19 | தஞ்சாவூர் மேற்கு | திருவையாறு |
| ஜூலை 21 | தஞ்சாவூர் மத்தியம் | ஒரத்தநாடு |
| ஜூலை 21 | தஞ்சாவூர் தெற்கு | பட்டுக்கோட்டை, பேராவூரணி |
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}