சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கும். தேர்தல் முடிவுகள் ஜூன் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தமிழக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும எம்.பிக்களாக தேர்வு முடியும். இதில் திமுக தனது நான்கு வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.மூத்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருக்கிறார். மாநிலங்களவை எம்பிக்களாக அதிமுகவுக்கு இரண்டு சீட் கிடைக்கும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிக கோரியபடி, ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}