திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

Dec 08, 2025,04:11 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


தேவார ஸ்தலங்களில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 72 ஆவது பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருநாவுக்கரசர் சுவாமிகளால் பாடல் பெற்ற பழமையான திருஸ்தலம் திரு கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோவில்.


இந்தத் திருக்கோவிலில், மகா ஏகாதச ருத்ர யாகம், அடியார்களின் நலனுக்காகவும் உலக மக்களின் நன்மைக்காகவும்

அடியார்களின் துன்பங்களும் பிணிகளும் நீங்கி குருவருளும் திருவருளும் பெற வேண்டும் என்பதற்காக திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமான திருக் கொண்டீஸ்வரத்தில் நேற்று காலை 7:00 மணி முதல் தொடங்கி மதியம் 2 மணி வரையில் 11 சிவாச்சாரியார்கள் திருவாதிரை நட்சத்திரமும் புனர்பூச நட்சத்திரமும் கூடிய சித்தயோகத்தில் சுப வேளையில் சிறப்பாக நடைபெற்றது.


ஏகாதச ருத்ர யாகத்தின் சிறப்பு: 




ஆதியில் வேதங்கள் நான்கும் ஒன்றாகத்தான் இருந்தது அனைத்து வேதங்களும் சேர்ந்து 100 கோடி ஸ்லோகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த 100 கோடி ஸ்லோகங்களையும் படிக்க முடியாத காரணத்தினால் சுவாமி அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ரிஷி முனிவர்களை உருவாக்கி அதனை ஒவ்வொரு பிரிவாக பிரித்து இறுதியில் வேதவியாசர்...


மகரிஷியினால் மூன்று வேதமாக ரிக் யஜு சாம வேதங்களாக பிரிக்கப்பட்டது. நான்காவது வேதம் என்பது அந்த மூன்று வேதங்களில் உள்ள பாடல்களின் தொகுப்பாக அதர்வண வேதம் என்ற வடமொழியில் அர்த்த  வேதமாகியது. 


வேதங்களின் சிறப்பு; 


(1) ரிக் வேதம் என்று சொல்லக்கூடிய வேதத்தின் சிறப்பு: 


ரிக் வேதம் என்று சொல்லப்படுவது ஆத்ம ஞானத்தை கொடுக்கக் கூடியது . நமது ஆன்மா எப்போது எல்லாம் துன்பம் அடைகிறதோ 

 இருளில் தவிப்பது போன்ற  துன்ப நிலை ஏற்படுகிறதோ  அப்போதெல்லாம் ரிக் வேதத்தின் ஸ்லோகங்களை படித்தால் நமக்கு புத்துணர்வு ஏற்படும் நமது மனம் எழுச்சி அடையும் என சொல்லப்படுகிறது.


ரிக் வேதம் சொல்லும் விளக்கம்: 


நீ உடம்பல்ல உயிர். உன்னை யாரும் இம்சிக்க முடியாது. உனக்கு பகல் இரவு இல்லை என்று எதுவும் இல்லை.  பிணி இல்லை துன்பமில்லை நீ இறைவனிடம் இருந்து வந்த உயிர் . நாம் இறைவனின் ஒரு அணுவில் இருந்து தோன்றியதால் நமக்கு ஆன்ம ஞானத்தையும் ஒலியையும் தரக்கூடிய ஸ்லோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. 


(2) யஜுர் வேதம்:




நமக்கு வேண்டியவற்றை பெற்றுக் கொள்வதற்கான ஸ்லோகங்கள். தனம் தானியம் பொருள் நோய் நீக்கம் ஆகிய நமக்கு வேண்டியவற்றை பெற்றுத் தரக்கூடிய ஸ்லோகங்கள் என்பது யஜுர் வேதத்தில் உள்ளது.


(3) ‌ சாம வேதம்: 


சாம வேதத்தில் சொல்லப்படுவது நாட்டியம் சங்கீதம் இவையெல்லாம் கிடைப்பதற்கு சொல்லப்படுவது தான் சாம வேத மந்திரங்கள். இவை மூன்றும் சேர்ந்த தொகுப்பாக சொல்லப்படுவது தான் நான்காவது வேதமான அதர்வண வேதம். 


இதில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுவது ஸ்ரீ ருத்ர மந்திரம். ஸ்ரீ ருத்ரத்திற்கான சிறப்பு என்னவென்றால்; வேதத்திற்கு நடுநாயகமாக விளங்குவது யஜுர் வேதம். யஜுர் வேதத்தில் நடுவாக உள்ளது நமக்கம் சமக்கம் என்று சொல்லப்படுகிறது.


அதில் எட்டாவது அணுவாக சொல்ல கூடியதும் நடுவாக வரக்கூடியதும் தான் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரம். ஸ்ரீ ருத்ரத்தில் எட்டாவது அணுவாக நமக்கு அதில் வரக்கூடிய நமசிவாய வேதத்திற்கும் உலகத்திற்கும் நடுவாக இருக்க கூடிய நமசிவாய என்ற மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. 


"நம "என்ற சொல்லுக்கும் "வய" என்ற சொல்லுக்கும் இருதயமாக இருக்கக்கூடிய எழுத்து "சி "என்ற எழுத்து. "நம" என்றால் மூச்சை இழுப்பதும் "சி "என்றால் மூச்சை நிறுத்துவதும் "வய" என்றால் மூச்சை வெளியில் விடுவதும் செய்கிறோம். பிராணாயாமம் என்று சொல்லக்கூடிய மூச்சுப் பயிற்சி செய்தால் நாம் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும் என்பது வேதத்தில் பிரமாணமாக சொல்லப்பட்டுள்ளது.


நமசிவாய மந்திரம் ஜெபித்தாலே அனைத்து பாவங்களும் விலகும்  என்பது சுவாமி நமக்காக கொடுத்த மந்திரம் தான் நமச்சிவாய மந்திரம் என்று சொல்லப்பட்டுள்ளது.


நமசிவாய மந்திரம் எங்கு சொல்லப்பட்டுள்ளது என்றால் 100 கோடி வேதங்களில் இருதயமாக இருப்பது யஜுர் வேதம். அந்த யஜுர் வேதங்களுக்கு நடுநாயகமாக விளங்குவது நமக்கம். நமக்கத்தில் நடுவாக இருப்பது எட்டாவது அனுபவம் என்று சொல்லக்கூடிய எட்டாவது அத்தியாயம்.


அந்த எட்டாவது அத்தியாயத்தில் நமசிவாய என்ற மந்திரம் முதன்மையாக வருகிறது. ஒரு சிவாச்சாரியார் ஒரு தடவை ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்தால் 11 தடவை சொல்கின்ற போது சிவபெருமானை நமஸ்காரம் செய்த பலன் கிடைக்கும் என்றும் அதுவே 11 சிவாச்சாரியார்கள் 11 தடவை ஸ்ரீருத்ரம் சொல்லும்போது 121 தடவை சிவபெருமானை தியானித்து பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.




இது வேதத்தில் ருத்ர கால்க்க்ஷினி என்று மிகவும் உயர்வாக சொல்லப்பட்டுள்ளது. எனவே திரு கொண்டீஸ்வரத்தில் ஏகாதச ஸ்ரீருத்ர யாகம் நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏகம் என்றால் ஒன்று தசம் என்றால் பத்து. ஆக பதினோரு சிவாச்சாரியார்களை வைத்து" திருமூலர் குருபீடத்தின்" சார்பாகவும் "அனைத்து அடியார்களின் திரு கூட்டத்தின்" சார்பாகவும் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. 


அதனைத் தொடர்ந்து சுமார் 500 சிவனடியார்களுக்கு அறுசுவை உணவுடன் அன்னதானமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குருவருளாலும் திருவருளாலும் ஸ்ரீருத்ர யாகம் இனிதே  நடைபெற்றது.... "திருமூலர் குரு பீடத்தின் சார்பாக" அனைத்து அடியார்களும் மன மகிழ்ச்சியுடன் ஸ்ரீ திருக்கொண்டீஸ்வரம்  சுயம்பு லிங்க சுவாமி  பசுபதிவனேஸ்வரரை வணங்கி பேரருள் பெற்ற நிகழ்ச்சி மிகவும் மனநிறைவை  தந்தது .


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்