- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்
நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை நாம் விளக்கத்துடன் பார்க்கப் போகிறோம். நமக்காக இந்த விளக்கத்துடன் கூடிய அவ்வையின் மொழிகளை தொகுத்தளிக்கிறார் கவிக்கடல் அ.ல.ஏகலைவன். இன்று அடுத்த இரு பாடல்களைப் பார்க்கலாம்.
கேட்டுக் கொடுத்தலில் கேண்மைப் புரிதலாகும்
ஈட்ட அதனை இயம்பிடல்- தேட்டமாகும்
வாளா இராது வழுவுடன் கேட்பதல்லால்
கேளாக் கடனும் கெடும்
ஈட்டும் இனிமை இரவாதி ருக்கவே
கூட்டுரைக்கும் சொல்லிலும் கொள்கையைக் -காட்டிடல்
தேட்டத்தின் செல்வங்கள் தேடியீவார் அவ்வாறே
கேட்பின் உறவும் கெடும்
விளக்க உரை

இல்லையென்று வருவோருக்கு வாழ்வியலுக்காக வேண்டி கேட்கும் கடன் தொகையை கொடுத்து உதவுவது சிறப்பாகும். அதேசமயம் அக்கடனை உரிய நேரத்தில் கேட்டு பெறுவதே உயரிய பண்பாகும் ; அவ்வாறு கேட்காமல் இருந்தால் அக்கடனும் இல்லை என்ற சொல்லில் விழுந்துகெடும் .
அதுபோலவே சேர்க்கும் செல்வங்கள் கொடுத்து உதவுவதற்காகவே ;கொடுத்த பின் காட்டும் அன்பு மேலானது கண்ணியத்திற்குரியது. ஆனால் கொடுத்தது கேட்பின் அடுத்தது பகை என்பது போல நாம் செய்த உதவியை திருப்பி கேட்டால் அந்த உறவும் கெட்டுவிடும்.
(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
{{comments.comment}}