டெல்லி: வாக்குத் திருட்டு நடந்ததாக கூறியுள்ள புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் கூறிய புகார்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் "வாக்கு திருட்டு" நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக நீண்ட வீடியோ விளக்கத்தையும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக அளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார் சந்தித்து விளக்கம் அளித்தார். தலைமைத் தேர்தல் ஆணையரான பிறகு அவர் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு இது. இதுதொடர்பாக ஞானேஸ்வர் குமார் கூறுகையில், பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க தேர்தல் விதிகளின் கீழ் கையொப்பமிட்ட பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று கருதப்படும்.
சில அரசியல் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது தவறான தகவல்களை பரப்புகின்ன. சட்டப்பூர்வமான ஆதாரம் இல்லாமல் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகள் அல்லது கூற்றுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் செயல்பட முடியாது. தவறான தகவல்களுடன் பவர் பாயின்ட் செய்து, அதன் மூலம் தேர்தல் ஆணையம் செயல்படும் என்று நினைத்தால் அது நடக்காது. இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் பிரமாணப் பத்திரம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தால் செயல்பட முடியாது. அப்படி செய்தால் அது சட்டத்திற்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.
வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஒரே பெயர் இரண்டு முறை இருப்பது தானாகவே ஒருவர் இரண்டு முறை வாக்களித்தார் என்று அர்த்தம் ஆகாது. SIR செயல்முறை மூலம் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியலை சரி செய்வது எங்கள் சட்டப்பூர்வ கடமை. பீகார் வரைவு பட்டியல்களில் உள்ள தவறுகளை செப்டம்பர் 1-ம் தேதிக்குள் சுட்டிக்காட்டும்படி அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன். SIR மூலம் நீக்கப்பட்ட பெயர்கள் மாவட்ட இணையதளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது உச்சநீதிமன்ற உத்தரவின்படி செய்யப்படுகிறது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று ஆணையம் பார்ப்பதில்லை. இருவருமே எங்களுக்கு சமம். இதை மீறி கருத்துக்கள் தெரிவிப்பது பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி உண்மையாக மாற்றுவது போன்றது. இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய டிஜிட்டல் பட்டியல்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்க இயலாது. வாக்காளர் தனியுரிமையைப் பாதுகாக்க 2019 உச்ச நீதிமன்ற தீர்ப்பு இதற்கு தடையாக உள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள தேடக்கூடிய பட்டியல்கள் தனியுரிமையை மீறாமல் எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது என்றார் அவர்.
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பாஜகவுக்கு செக் வைக்க.. இன்னொரு தமிழ்நாட்டுக்காரரை வேட்பாளராக்குமா இந்தியா கூட்டணி?
ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமில்லை... இதோ இன்றைய தங்கம் விலை நிலவரம்!
7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் ..இல்லாவிட்டால் புகார் வாபஸ்..ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன்கெடு
துணைக் குடியரசுத் தலைவர்.. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்?.. இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை!
Motivational Monday: 1000 புள்ளிகள் அதிரடி உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!
ஜகதீப் தன்கர் டூ சி.பி. ராதாகிருஷ்ணன்.. ஒருவர் அரசியல் புயல்.. சிபி ராதாகிருஷ்ணன் எப்படி இருப்பார்?
{{comments.comment}}