டெல்லி: லோக்சபா தேர்தலில் 31.2 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். இது வரலாற்று சாதனையாகும். அவர்களை நாங்கள் எழுந்து நின்று பாராட்டுகிறோம் என்று தேர்தல் ஆணையர்கள் கூறி எழுந்து நின்று கைதட்டி பாராட்டி கெளரவித்தனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக முடிந்து விட்டது. நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தமிழ்நாட்டில் மிக மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மற்ற மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம், அடிதடி, வாக்கு மையங்கள் சூறையாடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், நமது தேர்தல் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். இதில் உலக சாதனையும் படைத்துள்ளோம். அதாவது 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
உலக அளவில் இது மிகப் பெரிய சாதனையாகும். மொத்த ஜி7 நாடுகளின் வாக்காளர்களையும் சேர்த்தால் வாக்களித்த நமது வாக்காளர்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகமாகும். அதேபோல ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் வாக்காளர்களை விட இது 2.5 மடங்கு அதிகமாகும்.
தேர்தலில் வாக்களித்தவர்களில் 31.2 கோடி பேர் பெண்கள் ஆவர். இதுவும் ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த அளவுக்கு இதுவரை வாக்களித்ததில்லை என்று கூறிய பின்னர் அனைத்து தேர்தல் ஆணையர்களும் எழுந்து நின்று பெண் வாக்காளர்களைப் பாராட்டிக் கெளரவித்தனர்.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}